
புந்தோங் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் உயர்கல்வி கூடத்திற்கு நுழைவோம் 2025 விளக்ககூட்டம்
ஈப்போ, மே.8-
இவ்வாண்டில் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் தேர்வு முடிவுகளை கிடைக்கப்பெற்ற மாணவர்கள் இந்த உயர்கல்வி கூடத்திற்கு நுழைவோம் என்ற விளக்ககூட்டம் மற்றும் உயர்கல்வி கண்காட்சியில் கலந்துக்கொள்ள பொதுமக்களை அன்போடு அழைப்பதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், புந்தோங் சட்டமன்ற உறுப்பினருமான துளசி மனோகரன் கூறினார்.
இந்நிகழ்வு 10.5.2025( சனிக்கிழமை) காலை மணி 9.00 க்கு, ஜாலான் குட்வாரா, கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உயர்கல்விகூட ஏஜென்சிகள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவுள்ளனர். அத்துடன், பல பல்கலைக்கழக ஏஜென்சிகள் முகப்பிடம் அமைத்து தனிப்பட்ட முறையில் மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை வழங்குவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்முறை உயர்கல்விகூடங்களின் ஏஜென்சிகளான மெட்ரிகுலேசன், ஆசிரியர் உயர்கல்விகூடங்கள், போலிதெக்னிக், கோலேச் கொமனிட்டி, பாசாக் திவெட் கல்வி திட்டம் மற்றும் இதர பல்கலைக்கழகமும் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு விளக்களிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
காலையில் மாணவர்கள் பதிவு செய்தவுடன், காலையுணவு வழங்கப்படும். அதன் பின் மாணவர்களுக்கு விளக்கங்கள் வழங்க முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வு காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை மணி 5.00 க்கு முற்றுப்பெறும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.



