Malaysia

அனைத்துலக கராத்தே விளையாட்டாளர்களுக்கு விருந்துபசரிப்பு அனைத்துலக ரீதியில் ஒற்றுமை நட்புணர்வை வளப்படுத்துவோம்

அனைத்துலக கராத்தே விளையாட்டாளர்களுக்கு விருந்துபசரிப்பு
அனைத்துலக ரீதியில் ஒற்றுமை நட்புணர்வை வளப்படுத்துவோம

ஈப்போ, மே.12- அனைத்துலக ஒக்கோனாவா கரத்தே போட்டி 21வது ஆண்டாக இங்குள்ள கம்போங் சீமியில் ஈப்போ மாநகர் விளையாட்டு மையத்தின் பேட்மிண்டன் அரங்கில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துலக கராத்தே போட்டியில் சுமார் 18 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களின் விருந்தோம்பல் நிகழ்வினை பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.

இந்த அனைத்துலக கராத்தே போட்டியை மாஸ்டர் கே. ஆனந்தன் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவருக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்
கொள்வோம்.

விளையாட்டுத்துறை என்பது உலகிலுள்ள விளையாட்டாளர்கள் வாயிலாக ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வளப்படுத்துவது என்றால் மிகையாகாது. இந்த அனைத்துலக கராத்தே போட்டியாளர்கள் வெற்றியை மட்டும் இலக்காக எண்ணாமல் அனைத்துலக ரீதியில் ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் சுபீட்சத்தை பேண முற்பட வேண்டும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் வலியுறுத்தினார்.

இங்கு இந்த இரு நாட்களில் ஈப்போ மாநகருக்கு பெருமை சேர்க்கும் நாளாக அமைகிறது. குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் வெளி நாட்டவர்கள் இங்கே வந்துள்ளனர். அவர்களின் வருகை கராத்தே போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமாக இருந்தாலும், இதனை அனைத்துலக நட்புறவு நாட்களாக எண்ணி செயல்படுவோம் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஆசிய நாடுகள் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்ற போதும், தற்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வர தொடங்கி விட்டனர். குறிப்பாக, இம்முறை ரஷ்யா நாட்டு விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது நல்லதொரு அறிகுறியை வெளிப்படுத்துவதாக கராத்தே மாஸ்டர் கே.ஆனந்தன் கூறினார்.

அதுமட்டுமின்றி, இந்த அனைத்துலக போட்டி சிறப்பாக நடைபெற விளையாட்டுத்துறை அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வ.சிவகுமார் முதன்மை ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் உதவிகள் வழங்கியுள்ளனர். இவ்வேளையில் உதவிகள் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் பயிற்சியாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்.சிறப்பு பிரமுகர்களாக மல்லை சத்தியா, கராத்தே ராஜா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button