Malaysia

அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி விதிப்பு ASEAN நாடுகளின் ஒத்துழைப்பு அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் KLSICCI தலைவர் நிவாஸ் ராகவன் கருத்து

கோலாலம்பூர், மே 13-
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு மலேசியாவை பொருளாதார சரிவுக்கு கொண்டு செல்லாமல் இருப்பதற்கு மலேசியாவும் ASEAN நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் KLSICC தலைவர்
திரு. நிவாஸ் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வரி விதிப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். பிரதமர் குறிப்பிட்டது போல் ASEAN நாடுகளின் ஒத்துழைப்பு அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று KLSICCI நம்புகிறது என்று நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

எனினும், ஒவ்வொரு ASEAN நாடும் வெவ்வேறு விதமான வரி விகிதங்களை எதிர்கொள்வது கவலை அளிக்கிறது.
மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் (E&E), ரப்பர், பாமாயில் சார்ந்த பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் ஜவுளி போன்ற துறைகள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்த துறைகளுக்கு உடனடி ஆதரவு தேவைப்படுகிறது என்பதால் இதற்கு நடவடிக்கை அவசியம் என்று நிவாஸ் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதியாளர்களுக்கு வரி சலுகைகள், EXIM வங்கி மூலம் நிதி உத்தரவாதங்கள் மற்றும் புதிய சந்தைகளை ஆராயும் முயற்சிகள் போன்ற உதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று KLSICCI கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், வணிகங்களின் மீள்தன்மையை அதிகரிக்கவும், நுகர்வோர் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் KLSICCI பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தேசிய வர்த்தக நெருக்கடி பணிக்குழுவை அமைத்தல், அமெரிக்காவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துதல் மற்றும் MSMEகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை. ASEAN நாடுகளுடன் இணைந்து ஒருமித்த குரலில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் KLSICCI வலியுறுத்துவதாக நிவாஸ் ராகவன் சொன்னார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் பரிந்துறை செய்துள்ள சில நடவடிக்கைகள் வழி அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு மலேசியாவை பொருளாதார சரிவுக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு ஏற்படாது என்று தாங்கள் நம்புவதாக
திரு. நிவாஸ் ராகவன் கூறினார்.

அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான வரி விதிப்பு மலேசியாவின் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSMEs) பெரும் சவாலை ஏற்படுத்தும்.
குறிப்பாக 24% வரி விதிப்பு மலேசியாவின் போட்டித்தன்மையை குறைத்து, வணிக தொடர்புகளை பாதிக்கும் என்று நிவாஸ் ராகவன் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button