Malaysia

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்! இப்ராஹிம் 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு மூன்று கோடி வெள்ளி மானியத்தை அங்கீகரித்தார் சண்முகம் மூக்கன் தகவல்

 

நீலாய் ஜூன் 21-
நாட்டில் உள்ள ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று கோடி வெள்ளியை அங்கீகரித்து இருப்பதாக பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் அறிவித்தார்.

 

பேராக் மாநிலத்தில் உள்ள
கிளேபாங்
சிம்மோர் தமிழ்ப் பள்ளி, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ரினி தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள
நோர்த் ஹம்மோக் தமிழ்ப் பள்ளி, ஜொகூர் மாநிலத்தில் இன்னொரு தமிழ் பள்ளியான
கூலாய் பெசார் தமிழ்ப் பள்ளி மற்றும் பினாங்கு மாநிலத்தில் உள்ள
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கு இந்த மூன்று கோடி வெள்ளி் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு தீர்வு காண மூன்று கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக சண்முகம் சொன்னார்.

அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மூன்று கோடி வெள்ளியை அங்கீகரித்தார்.
“இந்தத் தருணத்தில் அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று சண்முகம் மூக்கண் குறிப்பிட்டுள்ளார்.

நீலாய் ஸ்பிரிங் ரிசோர்ஸ்ட் விடுதியில் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் 4 ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது சண்முகம் மூக்கன் இத்தகவலை வெளியிட்டார்.

இதனிடையே குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்வது மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் பள்ளி மேலாளர் வாரியம் உட்பட அனைத்து தரப்பிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

மேலும் 13 ஆவது மலேசியத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மானியத்தை முறையாகப் பயன்படுத்தினால் மேலும் கூடுதல் மானியத்தைக் கேட்டு பெறலாம் என்றார்.

தமிழ்ப் பள்ளிகள் விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் படிப்படியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

மேலும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும்.
குறிப்பாக நம் மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் காலடி எடுத்து வைக்க வேண்டும்.

அப்போதுதான் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த முடியும் என்று அவர் சொன்னார்.

மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார், கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ உட்பட நாடு தழுவிய அளவில் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button