
ஃபாத்வா தீர்ப்பு- மலேசிய முஸ்லிம்கள் மத்தியில் கவலை அம்மிடி அப்துல் மனான்
கோலாலம்பூர், ஜூன் 20-
ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கு ஃபாத்வாவைப் பயன்படுத்துவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு மலேசிய முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டரீதியான நிலைப்பாடு மலேசிய முஸ்லிம்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாகப் பக்காத்தான் ரக்யாட் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஹமிடி அப்துல் மனான் கூறினார்.
இந்தத் தீர்ப்பு ஷரியா மற்றும் சிவில் சட்டங்களுக்கு இடையிலான சட்டச் சிக்கல்களைத் தொடர்ந்து எழுப்பக்கூடும் என்றும், இது முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் நல்லிணக்கம் காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் தவறான புரிவலை சரி செய்ய முற்பட வேண்டியதன் அவசியத்தை அம்மிடி வலியுறுத்தினார்.



