Malaysia

பழைய நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்றது ஈப்போ இந்து தேவஸ்தான சபாவின் ஆண்டுக்கூட்டமும் தேர்தலும் சிறப்பாக முடிவுற்றது

பழைய நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்றது

ஈப்போ இந்து தேவஸ்தான சபாவின் ஆண்டுக்கூட்டமும் தேர்தலும் சிறப்பாக முடிவுற்றத

 

ஈப்போ, ஜுலை 4- ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் 84 வது பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இரா. சீத்தா ராமன் தலைவராக வெற்றிப் பெற்றார்.

 

அதே வேளையில் துணைத்தலைவராக க.சுரேன் வென்றார். செயலாளராக வெ.மு.தியாகராஜன் வென்றார்.

 

அத்துடன், எட்டு செயலவை உறுப்பினர்கள் இப்போட்டியில் வெற்றிப் பெற்றனர். அவர்களில், க.கண்ணையா, ப.பன்னீர்செல்வம், க.கோபிநாதன், எ.மனோகர், பா.புருஷோத்தமன், இரா.சிவபாலன்@ கனி, மு.நீலகண்டன் மற்றும் டாக்டர் மூ.சசிதரன் ஆகியோராவர்.

 

அவர்களுடன், இரு யாழ்ப்பாண செயலைவ உறுப்பினர்களான பி.உமாப்பரம் மற்றும் எஸ்.தயாளன் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.

 

இன்று நடைபெற்ற தேர்தலில் 266 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு வாக்களித்தனர். தேர்தல் சுமூகமாக முடிவடைந்து பழைய நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்றது என்று தலைவர் இரா.சீத்தா ராமன் குறிப்பிட்டார்.

 

முதல் கட்டமாக புந்தோங் மகா மாரியம்மன் ஆலய திருப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கான செயல்நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இத்தேர்தல் சிறப்பாகவும் வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியை அவர் தெரவித்துக்

கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button