Malaysia

மலேசிய இந்து சங்கத்தில் இனியும் சண்டை வேண்டாம்!!! இந்துக்கள் அணிதிரண்டு வாக்களித்தது இந்துக்களின் ஒற்றுமையை காட்டுகிறது தங்க கணேசன் தலைமைத்துவம் என்ன செய்யப் போகிறது?

மலேசிய இந்து சங்கத்தில் இனியும் சண்டை வேண்டாம்!!!

இந்துக்கள் அணிதிரண்டு வாக்களித்தது இந்துக்களின் ஒற்றுமையை காட்டுகிறது

தங்க கணேசன் தலைமைத்துவம் என்ன செய்யப் போகிறது?

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

 

கோலாலம்பூர், ஜூலை 26-

மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் 2 ஆயிலத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் அணிதிரண்டு வாக்காளித்துள்ள நடைமுறை இந்துக்களின் ஒற்றுமையை புலப்படுத்தியுள்ளதாக இந்து சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் கூறினார்.

 

கடந்த ஆண்டு மஹ்சா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்து சங்க மாநாட்டில் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு கூட்டம் தேர்தல் கூட்டமாக அமைந்ததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளது இந்துக்களின் ஒற்றுமையை பறைசாற்றியுள்ளதாக சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

 

நாங்கள் இந்து சங்கத்தை ஒரு பலமான இயக்கமாக கொண்டு வருவதற்கு பாடுபட்டோம். இதற்கு புதிய தலைமைத்துவம் வந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்திய போதும் தங்க கணேசன் அணி வெற்றி பெற்றுள்ளது ஆதரவு இருக்கிறது என்பதை காட்டிலும் ஆதிக்கம், அதிகாரம் இருப்பதையே காட்டுவதாக சிவசுப்ரபணியம் சொன்னார்.

 

எங்கள் நோக்கம் சமய தோக்கம். ஆலயங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். இந்து சங்கத்தின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டுமானால் அதன் தலைமைத்துவம் பலமாக இருக்க வேண்டும். பல்லீனம் சங்கத்தை மட்டுமன்றி இந்து சமயத்தையும் பாழ்படுத்தும் நிலைக்கு தள்ளப்படும் என்று சிவசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்து சங்கத்தில் நிலவிய கடுமையான போட்டிக்கு மத்தியில் தங்க கணேசன் அணியில் 8 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில் கணேஷ் பாபு அணியில் இருந்து கணேஷ் பாபுவும் மேலும் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது. தங்க கணேசன் அணி வெற்றி பெற்றுள்ளதால் இனியும் சங்கத்தில் பதவி சண்டை வேண்டாம் என்று சிவசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

 

இநது சங்கம் என்பது இந்து சமயத்திற்காக போராடும் ஒரு இயக்கமாக இருக்க வேண்டுமே தவிர பதவிக்கு அடித்து கொள்ளும் சங்கமாக இருக்கக் கூடாது. தங்க கணேசன் என்ன செய்யப் போகிறார்? சமயமா? பதவியா? உங்கள் குரல் ஓங்குமா? என்ன இந்து சமய மேம்பாட்டுத் திட்டங்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button