
சுங்கை சிப்புட்டில் பேராக் மாநில ம.இ.காவின் பேராளர் மாநாடு கோலாகலமாக நடைபெற்றது தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரிஸ்ரீநிவாஸ்
சுங்கை சிப்புட்,ஆக.2-
பேராக் மாநில ம.இ.காவின் 79ஆவது ஆண்டு பேராளர் மாநாடு சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பேராளர்கள், இளைஞர்கள் மத்தியில் பேராக் மாநில பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து திறப்புரை நிகழ்த்தினார்.
இந்த தலைமையுரையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பல்வேறு விவகாரங்கள் தொட்டு பேசி பேராளர்கள் கவனத்தை ஈர்த்தார். ம.இ.கா கிளைகளை வலுப்படுத்தி இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இந்த பேராக் மாநில ம.ஈ.கா மாநாட்டில் அதன் தலைவர் தான்ஸ்ரீ ராமசாமி தலைமையுரை நிகழ்த்தினார். அவரது உரையில் இந்திய சமுதாயத்தின் நலற் காக்கும் ஒரே கட்சி ம.இ.கா என்று சூளுரைத்தார்.

இந்த மாநாட்டில் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன், இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், தொகுதி, கிளைத்தலைவர், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி என்று திரளானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



