
தேசிய புவியியல் கழக கனவை நனவாக்க மஇகா உதவி மலேசிய புகைப்படக் கலைஞருக்கு RM15,000 நன்கொடை!
கோலாலம்பூர், ஆக. 6- தேசிய புவியியல் கழகத்தின் (National Geographic) ஆய்வில் பங்கேற்று கென்யாவின் மசாய் மாரா தேசிய வனப்பகுதியில் ‘மாபெரும் இடம்பெயர்வு’ (Great Migration) நிகழ்வைப் படம் பிடிக்கும் கனவை நனவாக்க, புகைப்படக் கலைஞர் தினேஷ் ஸ்ரீதரனுக்கு ம.இ.கா 15 ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்கியுள்ளது.
தினேஷ் ஸ்ரீதரனின் இச்சாதனைப் பயணத்திற்குத் தயாராவதில் உள்ள சவால்கள் இருந்தபோதிலும், மஇகாவின் இந்த உறுதுணையுடன், அவர் இந்த வார இறுதியில் ‘சவன்னா எக்கோஸ்’ (Echoes of the Savannah) என்ற தனது திட்டத்தைத் தொடங்கவுள்ளார்.
மஇகா தேசிய தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கவனத்திற்கு தினேஷின் நிலைமை குறித்து செனட்டர் டத்தோ சி. சிவராஜ் கொண்டு வந்த நிலையில் அவருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மஇகா உடனடியாக பதிலளித்து, தினேஷை சந்தித்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த நிதி உதவியை ம.இ.கா வ



