Malaysia

ம.இ.கா பேரா மாநில புத்ரா பேராளர் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது

 

சுங்கை சிப்புட், ஆக.6-
2025ஆம் ஆண்டுக்கான ம.இ.கா பேரா மாநில புத்ரா. மாநாடு சுங்கை சிப்புட்டிலுள்ள MH ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டம், மாநில புத்ரா தலைவர் திரு. வெண்ணிலவன் பர்ந்தாமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடை பெற்றது. புத்ரா உறுப்பினர்கள், கிளை மற்றும் தொகுதி அளவிலான தலைவர்கள்,மாநில நிர்வாகிகள் என பலரெம் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டினை, மஇகாவின் தேசிய உதவித் தலைவரும் பேரா மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவருமான தான்ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்.

தன்னுடைய உரையில், இளம் தலைமுறையினர் கட்சிக்குப் புதிய உயிரோட்டத்தை தருகின்றனர் என்றும், புத்ரா அணி என்பது எதிர்கால தலைமைக்கான பயிற்சி மையமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளம் உறுப்பினர்கள் ஒழுக்கம், ஈடுபாடு மற்றும் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதன்பின், ம.இ.கா தேசிய புத்ரா தலைவர் டாக்டர் எஸ். சதீஷ் குமார் அவர்கள் உரையாற்றினார். தன்னுடைய உரையில், தேசிய புத்ரா அணி நாடு முழுவதும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும், இளம் உறுப்பினர்களுக்கான பயிற்சி, சமூகச் சேவை மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற விடயங்களில் முன்னேற்றங்களை காண முடிகிறதெனவும் தெரிவித்தார்.

பேரா மாநில புத்ரா பிரிவு வெண்ணிலவன் தலைமையில் சிறப்பாக இயங்குகிறது என பாராட்டினார்.

மாநில புத்ரா தலைவர் பி. வெண்ணிலவன் அவர்கள் தனது உரையில், “ம.இ.கா போன்ற கட்சிக்குப் பின்னால் டான் ஸ்ரீ எம். இராமசாமி போன்ற சக்திவாய்ந்த தலைமை இருப்பது பெருமை” எனக் கூறினார்.

மேலும், புத்ரா அணியை மாநிலமெங்கும் விரிவுபடுத்தி, உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதே தன்னுடைய தலையாய குறிக்கோளாகும் எனத் தெரிவித்தார். இந்திய இளைய சமுதாயம் கல்வி, பொருளாதாரம், விளையாட்டு போன்ற அனைத்திலும் வெளுத்து வாங்க வேண்டும் என்றார்.

இந்த ம.இ.கா புத்ரா பொதுக்குழு கூட்டம், புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. இளம் தலைமுறை கட்சியின் எதிர்காலத்தை உருவாக்கும் வலிமையான ஆற்றலாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button