
மலேசிய இந்தியர் மேம்பாட்டு கழக ஏற்பாட்டில் அன்னையர் தந்தையர் ஒன்று கூடும் விழாவொன்று,
பினாங்கு,ஆக.6-
மலேசிய இந்தியர் மேம்பாட்டு கழக ஏற்பாட்டில் அன்னையர் தந்தையர் ஒன்று கூடும் விழா செபராங் ஜாயா கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிறப்பான ஏற்பாட்டில் நடந்தேறியது.
அன்னையர்
களையும் தந்தையர்களையும் ஒன்றிணைத்த இவ்விழாவிற்கு தலைமையேற்று வழிநடத்தியவர் அக்கழகத்தின் தலைவர் தமிழ் மறவன் பாலன் முனியாண்டி தமதுரையில் அன்னையர் தந்தையர்களோடு எல்லா பிரமுகர்கள், அமைப்புகளின் தலைவர்கள் என எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஒரு உறவு பாலம் கொண்ட ஒரு நிகழ்வாக இன்றைய நிகழ்வு நடத்தப்படுவதாக கூறினார்.
சிறப்பு பிரமுகர்களாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு.
மேலும் டத்தோஸ்ரீ க.புலவேந்திரன், சிங்கப்பூர் டாக்டர் சின்னையா நாயுடு, டாக்டர் சோபினா நாயிடு, டத்தோ மரியதாஸ், மற்றும் பல பிரமுகர்கள் உடன் கலந்து விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
தன்னாலான நல்லுதவிகளை தனது தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, பினாங்கு வாழ் இந்திய மக்களுக்கும் செய்து வருவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள் கூறினார்.

குறிப்பாக வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் பெரும் வசதிகளையும், விபத்தில் ஊனமான இரு உடன்பிறப்புகளுக்கு ஒரு வீடும் , திரட்டப்பட்ட நிதியின் மூலம் வங்கியில் 10 வருடத்திற்கு மாதம் ஆயிரத்து ஐநூறு வெள்ளி பெறவும் அப்பிள்ளைகளுக்கு எதிர்கால திட்டம் வகுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றதாக குறிப்பிட்டார்.
மேலும் உதவி என்று வருவோர்களுக்கு இல்லையென்று சொல்லாது இயன்றதை கொடுத்துதவுகிறேன்
எனது சம்பள பணத்திற்கும் மேலாக, மக்களுக்காகவே செலவு செய்து வருவதாக சொன்னார்.
அழைக்கப்பட்ட ஆலயம் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிப்புகள், ஏற்பாட்டுக் குழுவினரால் நல்கப்பட்டது.
சிறப்பான ஏற்பாட்டினை திறம்பட வழங்கிய அதன் தலைவர் திரு.பாலன் முனியாண்டி அவர்களும் நிர்வாகத்தினரும் பாராட்டு மழையில் நனைந்தனர்.



