
ஈப்போவில் தேசிய தினத்தை முன்னிட்டு பழைய ரக கார்களின் ஊர்வலம்
ஈப்போ,ஆக.19-
தேசிய தினத்தை முன்னிட்டு ஈப்போ மாநகரில் பழய ரக கார்களின் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
இங்கு சுமார் 130 ஆண்டு காலமாக செயல் பட்டு வரும் ரோயல் ஈப்போ கிளப் பேராதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பழய கார்களின் பயனீட்டாளர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்துக் கலந்துக்ஙகொண்டனர்.
ஈப்போ மாநகரில் நடைபெற்ற பழைய ரக கார்களின் ஊர்வலத்தில் அதன் உரிமையாளர்கள் சுமார் 200 பேர் கலந்துக்கொண்டதாக ஈப்போ ரோயல் கிளப் தலைவர்
கே. ஹாரிகிருஷ்ணன் கூறினார்..
இந்த ஊர்வலத்தில் இந்தியர்கள் மட்டும் அல்ல பிற இனத்தவர்கள் தங்களின் பழைய ரக கார்களுடன் கலத்துக்கொண்டது . பலரின் கவனத்தை ஈர்த்தது. அது சமுக ஒற்றுமையை வலுப்படுத்த வகை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இங்கு இந்த நிகழ்வு முதல் முறையாக பழை ரக கார்களின் பயனீட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து ஈப்போ ரோயல் கிளப் ஆதரவுடன் நடைபெற்றது.
இதே போன்ற நிகழ்வுகள் ஆண்டு்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹாரி கிருஷ்ணன் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் இன்று வாங்கும் புதிய கார்களின் விலை நாளுக்கு நாள் சரிவுக் கண்டு வருகிறது.
ஆனால் இந்த பழைய கார்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . கார் பழசாக இருக்கலாம் ஆனால் அதன் மௌவுசு என்று குறையாது.
ஆகவே இன்றை இளைஞர்கள் பழைய ரக கார் விற்பனைத் துறையிலும் ஈடுபட்டு தங்களின் வருமானத்தை ஈட்டலாம் என்று ஹாரி கிருஷ்ணன் வலியுறுத்தினார்.



