Malaysia

நாட்டின் பழைமை வாய்ந்த கூட்டுறவு கழகமான நேசா கூட்டுறவு கழகம் அதன் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாபஈவும் 20 விழுக்காடு போனஸ்ச வழங்க உறுதி

 

மொத்தம் 23 லட்சத்து 29 ஆயிரத்து 879 வெள்ளி 85 காசு உதவி நிதி வழங்கியது

டத்தோ சசிக்குமார் அறிவிப்பு

 

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

 

சிரம்பான்,ஆக.19-

நாட்டின் பழைபை வாய்ந்த கூட்டுறவு கழகங்களில் ஒன்றான நேசா பல்நோக்கு கூட்டுறவு கழகம் இவ்வாண்டு அதன் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாபஈவும் 20 விழுக்காடு போனஸ் தொகையும் வழங்கும் என்று நேசா பல்நோக்கு கூட்டுறவு கழகத்தின் தலைவர் டத்தோ சசிகுமார் மாரியப்பன் கூறினார்.

 

நேசா பல்நோக்கு கூட்டுறவு கழகத்தின் 40ஆம் ஆண்டு பொதுக்கூட்டமும் 50ஆம் ஆண்டு பொன்விழாவும் அண்மையில் சிலம்பானில் நடைபெற்றது. நேசா பொதுக்கூட்டம், நேசா பொன்விழாவை தொடக்கி வைத்த போது டத்தோ சசிக்குமார் இந்த அறிவிப்பை செய்தார்.

 

இந்த அறிவிப்பு தொடர்பில் அதற்கான ஆணையத்திடம் அனுமதி பெறப்படும். மக்கள் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கப்பட்ட நேசா கூட்டுறவு கழகமான நேசா உறுப்பினர்கள் நலன் கருதி பல ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக டத்தோ சசிக்குமார் தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு 1.3 மில்லியன் லாபஈவு பெற்ற நேசா 40 ஆண்டுகளுக்குப் பிறகு வீடமைப்புத் திட்டம் ஒன்றை தொடங்கி 2 மில்லியன் வெள்ளி லாபத்தை ஈட்டியது. இது மட்டுமன்றி கோலாலம்பூர் சென்டரல் வணிக வளாகத்தில் கட்டங்கள், சிரம்பான் தங்கும் விடுதி, ஜொகூர் பாருவில் இரண்டு கட்டடங்கள், செராஸ்சில் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கான நிலம் ஆகியவை நேசா அண்மையில் வாங்கிய சொத்துக்களாகும் என்று டத்தோ சசிக்குமார் சொன்னார்.

 

இந்த சொத்துக்கள் அனைத்தும் நேசாவிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடியவைளாகும். இவ்விழாவை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களுக்கான நிதிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. இதில்

முதலில், நிலத் திட்டத்தின் கீழ் நிதிகள் வழங்கப்பட்டன:.

இதில் பெந்தோங் நிலத்தின் உறுப்பினர்களுக்கு மொத்தம் 563,454.69 காசு மதிப்பில் 20 பேருக்கு வழங்கப்பட்டது.

 

குளுவாங் நிலத்தின் உறுப்பினர்களுக்கு மொத்தம் 250,000.00 வெள்ளி 3 பேருக்கு வழங்கப்பட்டது.

அடுத்து, ரந்தாவ் வீட்டமைப்பு திட்டம் மூலம், மொத்தம் ர 1,265,275.16 காசு 14 உறுப்பினர்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டன.

 

மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான “Nesa Merit Award” எனப்படும் “SPM/STPM” மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிதியாக மொத்தம் . 36,900 வெள்ளி சுமார் 46 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடரவிருக்கும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு University Start Up Package நிதி மொத்தம் 14,500 வெள்ளி சுமார் 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

2024 ஆம் ஆண்டிற்கான நேசாவின் திருமணம் அன்பளிப்பாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளும் நேசா உறுப்பினர்களுக்கு 250 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

அடுத்தப்படியாக 75 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அன்பளிப்பாக மொத்தம் 42,000 வெள்ளி சுமார் 42 மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

 

இறுதியாக 2024 ஆண்டிற்கான நேசா மரண சகாய நிதி மொத்தம் 157,000 வெள்ளி சுமார் 77 உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளின் மொத்த தொகை 2,329,879.85 ஆகும் என்று டத்தோ சசிக்குமார் கூறினார்.

 

இந்த 40ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் 50ஆம் ஆண்டு பொன்விழாவில் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று சுமார் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button