Malaysia

ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டன பத்துமலை திருத்தலத்தில் பல்வேறு மேம்பாடுகள் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா பாராட்டுக்குரியவர்

ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டன பத்துமலை திருத்தலத்தில் பல்வேறு மேம்பாடுகள் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா பாராட்டுக்குரியவர்

பத்துமலை, ஜன.10-

பத்துமலையில் தைப்பூச திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஏதுவாக பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.

மலேசியாவில் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் பத்துமலை அடிவாரத்தில் பல்வேறு முன்னேற்பாடு மற்றும் மேம்பாட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பத்துமலையில் நிறைவான மேம்பாடுகளை மேற்கொண்டுள்ள தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா பாராட்டுக்குரியவர். ஆண்டுதோறும் பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச விழா வெள்ளிரத ஊர்வலத்துடன் கிட்டத்தட்ட ஒரு வாரம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை முன்கூட்டியே பூர்த்தி செய்வதால் பத்துமலை தைப்பூசம் முன்கூட்டியே தொடங்குகிறது. இதற்காக தேவஸ்தானம்  ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிக்களை ஏற்படுத்தித் தருகிறது. இதில் பத்துமலை ஆற்றங்கரையை முழுமையாக சுத்தம் செய்துள்ளதும் அடங்கும். பக்தர்கள் இந்த ஆற்றங்கரையை முழுமையாக பயன்படுத்தலாம். பக்தர்கள் ஆற்றங்கரையிலும் ஆலய வளாகத்திலும் சுத்தத்தை பேண வேண்டும் என தான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button