
நகர்ப்புற ஏழை இந்தியப் பெண்களின் குரலைப் போற்றும் ‘EXCAPE-URMI’ மாபெரும் டிஜிட்டல் கண்காட்சி மின்னஞ்சல் செய்து பங்கேற்கலாம்
கோலாலம்பூர், டிச.1- மலேசியாவின் நகர்ப்புற ஏழை இந்தியப் பெண்களின் வலிமை, படைப்பாற்றல் மற்றும் அன்றாட எதிர்ப்புகளைக் கொண்டாடும் ‘எக்ஸ்கேப்-ஊர்மி’ (EXCAPE-URMI) டிஜிட்டல் கண்காட்சியின் தொடக்க விழா வரும் டிசம்பர் 6 சனிக்கிழமை கோலாலம்பூர், Four Points by Sheraton, Chinatown, Kuala Lumpur எனுமிடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த இருமொழிக் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) கொண்டாட்டம், கதை சொல்லுதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் நகர்ப்புற ஏழை மலேசிய இந்தியப் பெண்களின் குரல்களையும் நெகிழ்வுத்தன்மையையும் உலகறியச் செய்யவுள்ளது. ஆராய்ச்சியின் பின்னணி இந்த டிஜிட்டல் கண்காட்சி, பிரிட்டிஷ் அகடமியால் நிதியளிக்கப்பட்ட, ஓபன் யுனிவர்சிட்டி (யுகே) மற்றும் மலேசியப் பல்கலைக்கழகம் (UM) இடையேயான EXCAPE-URMI ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும். டாக்டர் கீதா ரெட்டி (Dr Geetha Reddy) தலைமையிலான இந்த ஆய்வுத் திட்டம், கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் உள்ள மலேசிய இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் காலனித்துவத்தின் விளைவுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்தை ஆராய்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள், டிஜிட்டல் கண்காட்சியைப் பார்வையிடுதல், கவிதைப் படைப்புகள், ஒரு சிறப்பம்ச காணொலி மற்றும் துறையில் முன்னணி அறிஞர்களான நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு விவாதம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். இந்த நிகழ்வு டிசம்பர் 6 சனிக்கிழமை காலை 10.30 முதல் மதியம் 1.00 வரை Four Points by Sheraton, Chinatown, Kuala Lumpur-இல் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தமிழ் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன், அதைத் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் பிணைய இணைப்புகளுக்கான மதிய உணவு உபசரிப்புடன் இந்நிகழ்ச்சி நிறைவடையும் என்பதால் பங்கேற்பாளர்கள் excapeurmi@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம்.



