MalaysiaPolitics

ஜம்ரி வினோத், Cikgu Chandra, ரிட்டுவான் தீ, பெர்னாவுஸ் ஓங் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஆர்.எஸ்.என்.ராயர் கேள்வி ஜம்தி வினோத் பேரணி குறித்து போலீசார், சட்டத்துறை அலுவலகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்-அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஏரான் அகோ டாகாங்

கோலாலம்பூர்,பிப்.5- நாட்டில் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்தில் “Himpunan Gerakkan Anti Rumah Anutan Haram” எனும் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் ஜம்ரி வினோத், Cikgu Chandra, ரிட்டுவான் தீ, பெர்னாவுஸ் ஓங் ஆகியோர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நாட்டில் வன்முறை, பயங்கரவாதம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் ஜம்ரி வினோத், Cikgu Chandra, ரிட்டுவான் தீ, பெர்னாவுஸ் ஓங் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளியில் இனம்,மதம் பாராமல் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தயர்கள், சபா, சரவாக் மக்கள் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று ஆர்.எஸ்.என்.ராயர் கேள்வி கேட்டார். ஒருவரின் மதத்தை இழிவாக பேசும் தனிநபர் யாராக இருந்தாலும் அரசாங்கம் அதனை கடுமையாக கருதுகிறது. மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் நபர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஏரான் அகோ டாகாங் கூறினார். இந்நாட்டில் குரல் கொடுப்பதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருந்தாலும் மதத்தை வைத்து பேசுவது சட்டப்படி குற்றமாகும். இந்த ஜம்தி வினோத் பேரணி குறித்து போலீசார், சட்டத்துறை அலுவலகம் போன்றவை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க சிபாரிசு செய்வதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேள்விக்கு பதிலளிக்கையில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஏரான் அகோ டாகாங் அவ்வாறு பதிலளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button