Malaysia

அன்பை மட்டு்ம் விதைத்துச் சென்ற பரம்பிதா இயேசு பிரானைப் போன்று நாமும் அன்பை மட்டும் விதைப்போம் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அன்பை மட்டு்ம் விதைத்துச் சென்ற பரம்பிதா இயேசு பிரானைப் போன்று நாமும் அன்பை மட்டும் விதைப்போம் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கோலாலம்பூர், டிச.25-
நமது பாவங்களை போக்குவற்கு பரமபிதா அவதரித்த இயேசு பிரானின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் நன்நாளாக கொண்டாடும் கிறிஸ்தவ சமயத்தவருக்கு ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினம் இயேசு பிறந்த நாள் மட்டுமன்றி ஒரு புதிய நம்பிக்கையாேடு புதிய ஆண்டுக்குள் அனைவரும் சிறந்து வளர்ந்தோங்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் நுழைய வேண்டும் என்று மகிழ்ச்சியோடு துதிப்பாடல்களை பாடி, உணவு உண்டு களிக்கும் ஒருதினமாகும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் உறவினர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறுவதோடு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நன்னாளகாக இருந்து வருகிறது. அந்த வகையில் குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதும் வழக்கமாகும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பல்லினங்கள் வாழும் மலேசிய நாட்டில் தத்தம் சமய விழாக்களை கொண்டாடுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் நிகழ்ந்துள்ள வெள்ளம் மற்றும் பேரிடர்களை கருத்தில் கொண்டு மிதமான அளவில் கொண்டாட்டங்களை வைத்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

மன்னிப்பை மக்களுக்கு வழங்கிய இயேசுவின் பிறந்த நாளில் மக்களின் துன்பம் மறைந்த நாளாக இருக்க வேண்டும். அன்பை மட்டும் விதைத்துச் சென்ற இயேசுவைப் போன்று நாமும் அன்பை விதைத்து மனதை தூய்மையாக வைத்திருப்போம் என்று கூறிய தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மீண்டும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button