Malaysia

எந்நாளும் அன்பை மட்டுமே அதிகமாகப் பகிர்வோம் ம.இ.கா கல்விக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

எந்நாளும் அன்பை மட்டுமே அதிகமாகப் பகிர்வோம் ம.இ.கா கல்விக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கோலாலம்பூர், டிச.24-
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிருஸ்துமஸ் தினமாக உலகம் கொண்டாடுகிறது. மலேசியாவில் வாழும் அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கும் ம.இ.கா கல்விக்குழு தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் தனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அன்பின் அர்த்தத்தையும் உண்மையின் தாத்பரியத்தையும் உலகுக்கு உணர்த்திய அவதாரம் இயேசு கிறிஸ்து. இந்தத் திருநாளை முன்னிட்டு, உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் தவறுகளை மன்னித்து அன்பு செலுத்துவது உன்னத பண்பு என டத்தோ டாக்டர் நெல்சன் கூறினார்.

பல்லின மக்கள் வாழும் நமது மலேசிய நாடு ஒரு புண்ணிய பூமி. இந்த மண்ணில் தான் அனைத்து இன மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும், சமய விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இன, சமய, மொழி, அரசியல் பேதம் கடந்து மலேசியர்கள் என்கிற ஒரே புள்ளியில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் நமது நாடு உலக நாடுகளுக்கு நல்லதொரு உதாரணம் என டத்தோ டாக்டர் நெல்சன் மேலும் சொன்னார்.

ஆகவே, இந்த நாள் மட்டும் அல்லாமல், எந்நாளும் அன்பை மட்டுமே அதிகமாகப் பகிர்வோம் என்று கேட்டுக் கொண்ட
ம.இ.கா கல்விக் குழு தலைவரான டத்தோ டாக்டர் நெல்சன் அனைத்து மலேசியர்களுக்கும் மீண்டும் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button