MalaysiaDevotionals

பத்துமலை நோக்கி வெள்ளிரதம் பவனி தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா தலைமையகத்தில் தண்ணீர் பந்தல் ம.இ.கா தலைமைச்செயலாளர்டத்தோ ஆனந்தன் தகவல்

கோலாலம்பூர், பிப்.8-

வெள்ளிரதம் பத்துமலை நோக்கி பவனி வருவதை முன்னிட்டு ம.இ.கா தலைமையக்தில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா தலைமையகத்தில் தண்ணீர் பந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ம.இ.காவின் தலைமைச்செயலாளர் டத்தோ ஆனந்தன் கூறினார்.

வெள்ளிரதம் பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படவுள்ளது.

இந்த வெள்ளிரதம் வழக்கமான சாலைகளில் பவனி வந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் ம.இ.கா தலைமையகம் அருகில் வந்தடையும். இதற்காக ம.இ.கா தலைமையகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படவிருப்பதாக தேசம் ஊடகத்திடம் டத்தோ ஆனந்தன் தெரிவித்தார்.

இந்த தண்ணீர் பந்தலில் பக்தரகளின் பசி-தாகம் தீர்க்க குளிர்பானம் மற்றும் உணவு பண்டங்கள் வழங்கப்படுவதால் வெள்ளிரதம் முன்னும் பின்னும் நடந்து வரும் பக்தர்கள் தங்கள் தாகம் பசியை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆனந்தன் சொன்னார்.

இந்த தண்ணீர் பந்தல் நிகழ்வுக்கு ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள், ம.இ.கா மாநில தலைவர்கள், ம.இ.கா தொகுதி தலைவர்கள், ம.இ.கா கிளைத்தலைவர் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொள்ளவிருப்பதால் மக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி டத்தோ ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button