Malaysia
Trending

ரவூப் இந்திய சமூக இயக்கம் மற்றும் ரவூப் இந்து ஆலய சபாவின் ஏற்பாட்டில் ஜனவரி 21இல் இலவச மருத்துவ முகாம் மக்கள் பங்கேற்க அழைப்பு

ரவூப், ஜன.20-
ரவூப் இந்திய சமூக இயக்கம் மற்றும்
ரவூப் இந்து ஆலய சபாவின் இணை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ரவூப் சுப்ரமணியர் ஆலயத்தில் உள்ள அம்பலவாணர் மண்டபத்தில் ஜனவரி 21ஆம் தேதி காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 1 மணிவரையில் நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாட்டாளர் CD ராஜா கூறினார்.

இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் 40 வயதில் இருந்து 59 வயதுடைய சொக்சோ சந்தாதரர்கள் மற்றும் STR உதவி பற்றுச்சீட்டு பெறுபவர்களும் இதில் பங்கேற்கலாம்.

இந்த பரிசோதனையில் கலந்து கொண்டவர்களின் ரத்த முடிவுகள் இரண்டு வாரத்தில் மீண்டும் அழைக்கப்பட்டு வழங்கப்படும். இவர்களுக்கு மருத்துவ பிரச்சினை இருப்பின் மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று CD ராஜா தெரிவித்தார்.
தொடர்புக்கு

N.Darmarajah @CD Raja
0109609312

 

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button