IndiaInternationalMalaysia
Trending

பத்துமலை திருத்தலத்தில் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

பத்துமலை, ஜன.25-
பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதனால் பத்துமலை தைப்பூச உற்சவம் பக்தர்கள் முன்னிலையில் பக்தி மழையில் மூழ்கியுள்ளது. இதில் மலேசியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் பக்தி பரவசத்துடன் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோலாலம்பூர் பத்துமலை திருத்தலம், பினாங்கு தண்ணீர் மலை, ஈப்போ கல்லுமலை, சுங்கை பட்டாணி முருகன் ஆலயம், கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் தைப்பூச திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மலேசியாவில் உலகப் பிரசித்திபெற்ற பத்துமலையில் இந்த விழா ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேவற்கொடி ஏற்றப்பட்ட நிலையில் பக்தர்கள் விடிய விடிய தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

பால் காவடி, பன்னீர் காவடி, பூஷ்ப காவடி, கரும்பு காவடி, வண்ண மயில் காவடி, பால் குடம் ஆகியவற்றை ஏந்தி பக்தர்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் பத்துமலை பக்தி பரவசத்தில் மூழ்கியுள்ளது. பத்துமலையில் கிட்டத்தட்ட 20 லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் பக்தர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button