Malaysia
Trending

மூவாயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்

பத்துமலை, ஜன.25-
பத்துமலை திருத்தலத்தில் பிப்ரவரி முதல் வாரம் மூவாயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

பத்துமலை திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த தைப்பூச உற்சவத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் திரள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக
பத்துமலையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள மின் படிக்கட்டு நிர்மாணிப்பதற்கான தேவஸ்தானத்தின் திட்டத்திற்கு மாநில அரசு முழு ஆதரவு வழங்கும் என்று மந்திலி பெசார் அறிஙித்தார்.

இந்த முறை மாநில அரசாங்கத்தின் தைப்பூசா விழாவும் பத்துமலை வளாகத்தில் நடைபெற்றது. தேவஸ்தானத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மந்திரி புசார் அத்தகவல்களை வெளியிட்டார். மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் எந்தவொரு பாகுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

இதில் குறிப்பாக தைப்பூச விழாவின் கொண்டாட்டங்களை மற்ற இன மக்கள் புரிந்து கொள்கின்றனர்.
அதே போன்று முஸ்லிம் மக்களின் தியாகப் பெருநாளை மற்ற இன மக்கள் புரிந்து கொள்கின்றனர். இது தான் மலேசியர்களின் கலாச்சாரம். ஒற்றுமை. இது தொடர வேண்டும்.

மேலும் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் கூறினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் இதர தலைவர்களும் பத்துமலையில் மின் மடிக்கட்டு, 3 ஆயிரம் பேர் அமரும் மண்டபம் ஆகிய திட்டம் குறித்து என்னிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதில் மின் படிக்கட்டு கட்டும் சிலாங்கூர் மாநில அரசு, செலயாங் நகராண்மைக் கழகம், நில அலுவலகம் என அனைத்தும் முழு ஆதரவை தருகிறது. இருந்தாலும் இந்த திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற வேண்டும்.

அந்த அனுமதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும் அனைத்தும் சரியாக நடந்தால் 3 ஆயிரம் அமரக் கூடிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும்.
இதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button