Malaysia
Trending

சிலாங்கூர் மாநிலத்தில் மிகக்குறைந்த அளவில் தண்ணீர் கட்டண உயர்வு இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் தண்ணீர் கட்டணம் உயராது சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி அறிவிப்பு

பத்துமலை, ஜன.25-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் தண்ணீர் கட்டணம் உயராது என்று பத்துமலைக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் கூறினார்.

மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தீபகற்ப மலேசியா, லாபுவானின் தண்ணீர் கட்டணம் உயர்கிறது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த புதிய தண்ணீர் கட்டணம் அமலுக்கு வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆலயம் உட்பட வழிப்பாட்டு தலங்களுக்கு தண்ணீர் கட்டண உயர்வு இல்லை. இதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிலாங்கூர் மாநிலம்தான் மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தவுள்ளது.
எனினும் தண்ணீர் சேவைக்கான உதவித் தொகைகளும் தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி அறிவித்தார்.

இந்த தண்ணீர் கட்டண உயர்வு சிலாங்கூர் மாநில மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உறுதியாக கூறினார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button