Malaysia
Trending

டத்தோஸ்ரீ நஜீப் விவகாரம் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு காத்திருப்போம்

கோலாலம்பூர், ஜன.30-

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அரச மன்னிப்பு கோரியுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு காத்திருங்கள் என்று. பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தபா கூறினார்.

நஜீப் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருங்கள் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அரச மன்னிப்பு கோரியுள்ளார் என்று அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அரச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விவகாரம் குறித்து அரச மன்னிப்பு வாரியம் அதிகாரப்பூர்வமான அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும். பொய்யான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தபா கேட்டுக் கொண்டார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button