அருந்தமிழ் அரங்கத் திறப்பு விழாவில் ம.இ.காவின் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் உறுதி!
தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கும் தமிழாசிரியர்களின் வளர்ச்சிக்கும் இந்திய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் ம.இ.காவின் ‘புதிய கல்விப் பெருந்திட்டம் அரணாக இருக்கும்’- அருந்தமிழ் அரங்கத் திறப்பு விழாவில் ம.இ.காவின் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் உறுதி!
பேராக்,பிப்.4-
நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் தரம் தொடர்ந்து ஓங்கவும் நமது மாணவர்கள் கல்வி கேள்வியில் சிறந்தோங்கவும் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி பட்டறைகளை எம்.ஐ.இ.டி யின் மூலமாக விரைவில் நடத்த ஏற்பாடு செய்யவிருப்பதாகத் ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கூறினார்.
நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்து வருவது போற்றுதற்குரியது. அதேவேளையில் இனிவரும் காலங்களின் நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் இந்திய மாணவர்களின் நிலையும் எவ்வாறு இருக்கும்; எத்தகைய சூழலையும் பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டிவரும் எனத் துல்லியமாகக் கண்டறிந்து அவற்றைக் களையும் வழிமுறைகளையும் வகுத்து அதனைச் செயல்படுத்தவும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உதவியோடு ம.இ.கா இப்பொழுதே அதற்கான ஆய்விலும் களப்பணியிலும் தூரநோக்குச் சிந்தனையோடு செயல்பட்டு வருவதாக கோலக்கங்சார், கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருந்தமிழ் அரங்கம் எனும் மண்ட திறப்புவிழாவில் உரையாற்றுகையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த மலேசிய இந்தியருக்கான புதிய கல்விப் பெருந்திட்டம் எதிர்காலத்தில் நம் மலேசிய இந்தியரின் கல்வி வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருக்கும். இதன் முதல் அடியாக, பெங்ளூரிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்
மேலும், மலேசியாவிலுள்ள சீன மற்றும் தேசிய பள்ளிகளின் புறத்தோற்றத்திற்கும் வசதிகளும் ஈடாகத் தமிழ்ப்பள்ளிகளும் எல்லா நிலையும் வளர்ச்சியும் மேம்பாடும் காண வேண்டும். அரசாங்கம் தத்தம் கடமைகளை அவரவர் காலத்தில் தங்களால் முடிந்தவரைச் செய்து வந்தாலும் நம் சமுதாயம் நம் கடமை என்பதற்கொப்ப நாமும் நம் சுற்று வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதில் முனைப்புக் காட்டுதல் அவசியம் எனத் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
கோலக்கங்சார் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டித்தோட்டத்யய தமிழ்ப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருந்தமிழ் அரங்கம் எனும் மண்ட திறப்புவிழா கடந்த பிப்ரவரி 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் தரமான படைப்புகளுடன் தொடங்கிய இவ்விழாவிற்கு ம.இ.காவின் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
சுமார் 30 மாணவர்களையும் 7 ஆசிரியர்களையும் கொண்ட இப்பள்ளி புறத்தோற்ற மேம்பாடு, ஆசிரியர்களின் தரம், மாணவர் உருவாக்கம் போன்றவற்றில் மிகச் சிறப்பாக விளங்குவதோடு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பன்மை வகுப்பு பள்ளியானாலும் அனைத்துலக ரீதியில் பல சாதனைகள் படைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.
அதற்காக அரும்பாடுபடும் தலைமையாசிரியை வை.சிவகாமி, துணைத்தலைமையாசிரியை குமாரி தனலட்சுமி, ஆசிரியர்கள் பள்ளி மேலாளர் வாரியக்குழுத்
தலைவர் வீ.சின்னராஜூ பி.பி.என், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சு.முருகன் அனைவரையும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெகுவாகப் பாராட்டினார்.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அருந்தமிழ் அரங்கத்தைத் திறந்து வைத்ததுடன் தமது சொந்த நன்கொடையாக 15 ஆயிரம் வெள்ளியும் எம்.ஐ.இ.டியின் நன்கொடையாக 10 ஆயிரம் வெள்ளியும் வழங்கினார்.
இதற்கு பள்ளியின் மேலாளர் வாரியக் குழுத் தலைவர் வீ.சின்னராஜூ தமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
சுமார் 6 மாதக் காலங்களில் அரசாங்க மானியம் 2 லட்சத்துடன் மனமுவந்து உதவி புரிந்த பல நல்லுள்ளங்களால் சுமார் 35 ஆயிரம் வெள்ளி நன்கொடையாலும் இரண்டு அறைகளுடன் கூடிய மண்டபம், 2 கழிப்பறைகளும் இதர மேம்பாடுகளும் செய்யப்பட்டது.
இவ்வேளையில் எல்லா வகையிலும் உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்களுக்கும் பக்கபலமாக இருந்த பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர் முருகன் அவர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றியினை அவர் தெரிவித்துக் கொண்டார்.
அருந்தமிழ் அரங்கம் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைக்காக மட்டுமல்லாமல் சுற்றுப்புற மக்களின் பயன்பாட்டிற்காகவும் மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. அருந்தமிழ் அரங்கம் சிறப்பாக உருவாக எல்லாவகையிலும் உதவி புரிந்தோருக்கும் அனைத்துலக ரீதியிலும், தேசிய மாவட்ட ரீதியிலும் பல சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளும் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கிய ம.இ.காவின் தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்குப் பள்ளியின் சார்பில் தமது நன்றியினை பள்ளியின் துணைத்தலைமையாசிரியைக் குமாரி தனலட்சுமி தெரிவித்துக் கொண்டார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்