Malaysia

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் அன்பு இருக்கும் இடமெல்லாம் சரவணன் இருப்பார்

கோலாலம்பூர்,பிப்.4-

தமிழுக்கு தொண்டாற்றி தமிழ் இலக்கியம் பேசும் மலேசிய அரசியல் ஆளுமை எங்கள் சரவணனனுக்கு இன்று பிறந்தநாள்…

1968 பிப்ரவரி 4இல் பிறந்த நீங்கள்
நினைவு தெரிந்த நாள் முதல் தமிழும் சமயமும் இரு கண்கள் என்று போற்றி செயல்பட்டு வந்தீர்கள்…. செந்தமிழ் சுடர் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் பெருமைகளை சொல்ல மல்லை தமிழ் சங்கம் வழங்கிய பெருந்தமிழன் ராஜராஜன் விருது பிறந்தநாள் பரிசு…

தமிழ் மணம் கமழும் தமிழகத்தில் சிறந்த அயலகத் தலைவராக பார்க்கப்படும் உங்களை கனியம் பூங்குன்றனார் விருதும் கௌரவித்துள்ளது.

தமிழுக்கும் தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும் ஆற்றிய தொண்டை ஒட்டு மொத்த தமிழகமே பாராட்டியுள்ளது.  அதோடு நின்று விடாமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பாராட்டியுள்ளார்.

பெருந்தமிழன் ராஜராஜன் விருது…

பூங்குன்றனார் விருது…

உங்களுக்கு உங்கள் பிறந்தநாளில் மகுடம் சூட்டியுள்ளது.
இந்த உயரத்தை அடைய நீங்கள் போட்ட விதை இன்று மாங்கனி மரமாகியுள்ளது.
அதனால்தான் என்னவோ விக்னேஸ்வரன் தம்பியாகி விட்டீர்கள்.

துன் சாமிவேலு பாசறையில் வளர்ந்தவர் நீங்கள் சொல்லவும் வேண்டுமா?
நீங்கள் போட்ட உழைப்பு கொஞ்சமல்ல… நஞ்சமல்ல…

அலுவலகப் பையனாக ம.இ.காவில் நுழைந்து ஹோஸ்பிட்டல் குவாட்ரஸ் பகுதியில் வளர்ந்து 1994இல் தித்திவங்சா ம.இ.காவில் சேர்ந்து செயலாளர் ஆகி படிப்படியாக உயர்ந்தவர்.

தமிழ்மொழியில் இவருக்கு இருந்த ஆளுமை இவரை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரானார்…
செனட்டரானார்…
நாடாளுமன்ற செயலாளர் ஆனார்…
துணையமைச்சர் ஆனார்…
அமைச்சர் ஆனார்…
இவையெல்லாம் ஓரிரவில் நடக்கவில்லை…
பல இரவுகள் சரவணன் என்ற ஆளுமை கண்விழித்து உழைத்ததன் பலன்…

மலேசிய நாட்டின் சிறந்த ஆளுமையாளராக தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் டத்தோஶ்ரீ டாக்டர் எம்.சரவணன்
இளம் வயதிலேயே மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக ஐந்து முறை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். கூட்டரசு பிரதேச துணை அமைச்சர், இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் மனிதவள அமைச்சர் என்று அப்பதவிகளுக்கு பெருமை சேர்த்த

டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்…
வாழ்க பல்லாண்டு
அன்புடன்
குணாளன் மணியம்
தோற்றுநர், தேசம் ஊடகம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button