
பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் 1,100 லிட்டர் பால் விநியோகம்
பத்துமலை,பிப்.4-
பத்துமலை தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் பலரும் பல நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் கோம்பாக் ம.இ.கா இளைஞர் பிரிவினர் Kepimpinan Pertubuhan Pengerak Sebaya Selangor இயக்கத்துடன் இணைந்து 1,100 லிட்டர் பசும் பால் விநியோகம் செய்துள்ளது.
இந்த பசும்பால் 1 லிட்டர் 1 வெள்ளி அடிப்படையில் 500 பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு ஏதுவாக இந்த பசும் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பசும்பால் விநியோக நடவடிக்கைக்கு நன்கொடையாளர்கள் பலரும் ஆதரவு வழங்கினர். இந்த 1,100 லிட்டர் பசும்பால் பத்துகேவ்ஸ் பிளாசா அம்னோவில் வழங்கப்பட்டன.
இம்முயற்சிக்கு ஆதரவு வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கோம்பாக் ம.இ.கா இளைஞர் பிரிவு மற்றும்
Kepimpinan Pertubuhan Pengerak Sebaya Selangor இயக்கம் ஆகியவை நன்றி தெரிவித்துக் கொண்டன.



தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



