InternationalMalaysia

மலேசியா-திருவனந்தபுரம் இடையில் ஏர் ஆசியா விமான சேவை முதல் விமானம் கோலாலம்பூர் வந்தடைந்தது

சிப்பாங், பிப்.24-
மலேசியா-திருவனந்தபுரன் இடையில் ஏர் ஆசியா தனது விமானப்பயணத்தை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கேரளா, திருவனந்தபுரத்தில் இருந்து முதல் ஏர் ஆசியா விமானம் பயணிகளுடன் மலேசியா, கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

ஏர் ஆசியா விமான நிறுவனம் மலேசியாவுக்கும் கேரளாவின் கொச்சினுக்கும் இடையில் நேரடி பயண சேவையை ஏற்கெனவே கொண்டுள்ளது.

அந்த வகையில் இரண்டாவது வழித்தடமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமான சேவை தொடங்கியுள்ளதாக ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏர் ஏசியா இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான தனது விமானப் பயண சேவையை மேலும் விரிவுபடுத்தி உள்ளது.

தற்போது இரண்டாவது வழியாக திருவனந்தபுரத்திற்கு ஏர் ஆசியா நேரடி பயணச் சேவையை தொடங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் இருந்து முதல் ஏர் ஆசியா விமானமான ஏகே8 விமானம் பிப்ரவரி 22 காலை 7.00 மணியளவில் கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ தியோங் கிங் சிங் அவ்விமானத்தில் வந்த கேரளா பயணிகளை வரவேற்றார். ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கமும் அவர்களை வரவேற்றார்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே விமான இணைப்பை விரிவுபடுத்துவதில் ஏர் ஏசியாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்புக்குப் பிறகு, அதிகமான பயணிகள் தங்களின் தாயகத்திற்குச் செல்ல இது உதவுகிறது என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் மேலும் சொன்னார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button