Malaysia

சினிமா பங்களுக்கு நிகரான அனைத்துலக தரம் கொண்ட மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார் மார்ச் 7ஆம் தேதி திரையரங்கில் ரசிகர் பட்டாளத்தை திரட்டுவோம்

கோலாலம்பூர்,பிப்.26-

தமிழ்நாட்டு சினிமா திரைப்படங்களுக்கு நிகராக மலேசிய கலைஞர்களாலும் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதோடு அனைத்துலக தரத்தில் ஒரு படத்தை தயாரிக்க முடியும் என்பதை ஒரு கத சொல்லட்டா சார் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான kash Villan நிரூபித்துள்ளார்.

ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு தாய் 10 மாதம் சுமந்து தன் பிள்ளையை பெற்றேடுப்பதற்கு சம்மாகும். ஒரு தாய் பார்த்துப் பார்த்து தன் பிள்ளையை பெற்றேடுக்கிறாள். அது இறைவன் கொடுத்த வரம். தன் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அந்தத் நினைப்பதுண்டு.
அது போலத்தான் ஒரு கலைஞனின் கலைப்பயணமும் இருக்கும்.

ஒரு படத்தை உருவாக்க அவன் படாதபாடுபடுகிறான். அப்படி படாதபாடுபட்டு உருவாக்கப்பட்ட ஒரு மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார். என்ன கத சொல்லப் போறீங்க சார் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஒரு கதையை எப்படியும் சொல்லி விடலாம். அது அவரவர் சிந்தனையை பொறுத்த விஷயம்.

ஒரு கத சொல்லட்டா சார்…தன் சிந்தனையை தட்டி எழுப்பியுள்ளார் kash villan. ஒரு கதையை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார். அதைத்தான் நான் முதலில் சிந்தனை புரட்சி என்றேன். இந்த முறை இப்படியும் சிந்திக்கலாமா என்பதை செல்லும் ஒரு கதை கொண்ட மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்.

Kash villan இயக்கத்தில் ஒரு மாறுபட்ட படைப்பு ஒரு கத சொல்லட்ட சார்…
ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை பாணியில் சொல்லும் ஒரு மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…

உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நடப்பது அதிசயமாக தோன்றும் என்பதை சொல்லும் படம் ஒரு கத சொல்லட்டா சார்…
சினிமா திரைப்படங்களுக்கு நிகரான ஒரு திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
ரசிகர்களை கவரும் நான்கு பாடல்கள்…
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை வெடிகள்…

மலேசிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்…
மலேசிய ரசிகர்கள் ஆதரவு வழங்க வேண்டிய ஒரு திரைப்படம்
ஒரு கத சொல்லட்டா சார்

Kash Villain, விகடகவி,மகேன், CK, பென்ஜி, Moon Nila, திவ்யா நாயுடு, சிவகாந்த், லல்லு, Kim Fukazawa, Joy Rasan, ஷாமினி சாரதா மற்றும் பலர் நடித்துள்ள ஒரு மலேசிய திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார்
Kash Villain தயாரித்து இயக்கிய மலேசிய திரைப்படம்
ஒரு கத சொல்லட்டா சார்…

மலேசிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு திரைப்படம் ஒரு கத சொல்லட்டா சார். அப்படியானால் அந்த ரசிகன் என்ன செய்ய வேண்டும். திரையரங்கம் சென்று படத்தை பார்க்க வேண்டும். ரசிகர்கள் இதனை செய்வார்களா?

மலேசிய திரைப்பட திரையுலகம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அது ICUவில் உள்ளது. ICUவில் மூச்சுக்கருவி பொருத்தப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குழந்தை மலேசிய திரைப்படத்துறை. இதனை நீங்கள் சாகடிக்கப் போகிறீர்களா? அல்லது மூச்சுக்கருவியை எடுத்து சுயமாக மூச்சு விட வழி செய்யப் போகிறீர்களா?

இந்த ஒரு கத சொல்லட்டா சார் திரைப்படத்தை வெற்றி பெறச் செய்வது மலேசிய இந்திய சமுதாயத்தின் கடமையாகும். சினிமா படம் பார்ப்பது உங்கள் உரிமை. அதனைப் பாருங்கள். Enjoy பண்ணுங்கள . ஆனால், மலேசிய திரைப்படத்தையும் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என்று திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான kash villan கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தலைமுறை தோற்றுவிடக்கூடாது. அடுத்த தலைமுறை கலைத்துறைக்கு படித்துக் கொண்டிருக்கிறது. அவர்களும் முழு நம்பிக்கையோடு மலேசிய திரைப்பட துறையை நாடி வருவார்கள். அவர்களை நாம் அழ வைக்க வேண்டுமா? கைதூக்கி விட வேண்டாமா?

மலாய், சீன திரைப்படங்கள் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து கொடுக்கிறது. ஆனால், மலேசியாவில் தமிழ்நாடு சினிமா படங்கள்தான் மில்லியனை அள்ளிக் கொடுக்கின்றன.

நாங்கள் மீண்டும் சொல்லது ஒன்றுதான். தமிழ்நாட்டு சினிமா படங்களை பாருங்கள். மகிழுங்கள். அதேதேரத்தில் எங்களையும் வாழ வையுங்கள். பினாஸ் விதிமுறைப்படி திரையரங்கில் மலேசிய திரைப்படத்தை காண மூன்று நாள் ரசிகர் கூட்டம் இல்லை என்றால் படத்தை எடுத்து விடுவார்கள். நாம் அனைத்தையும் இழந்து விட்டோம். திரையரங்கில் திரைப்படத்தையும் இழக்க வேண்டுமா?

மலேசியாவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் இந்தியர்கள் அதாவது 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் படம் பார்க்கச் சென்றால் மலேசியத் திரைப்படத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லலாம் என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர். உங்கள் ஆதரவு தமிழ்நாட்டு சினிமா திரைப்படங்களுக்கு இருந்தாலும் பரவாயில்லை. அது தவறில்லை. மலேசியத் திரைப்படங்களையும் வாழ வையுங்கள் என்பது எங்களின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.

உங்கள் ஆதரவு ஒரு கத சொல்லட்டா சார் மலேசிய திரைப்படத்திற்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
நமது கலைத்துறை நமது பொறுப்பு
நமது கலைஞர்கள் நமது பொறுப்பு.
நமது திரைப்படம் நமது பொறுப்பு. ஒரு கத சொல்லட்டா சார் நமது பொறுப்பு. ஒரு கத சொல்லட்டா சார்…
திரையரங்கை நிரப்புவது நமது பொறுப்பு…

ஒரு கத சொல்லட்டா சார். எதிர்வரும் மார்ச் 7 முதல் உங்கள் திரையரங்குகளில்
ஒன்றாக கைகள் கோர்த்து நண்பர்களுடன் திரையரங்கம் செல்வோம் ஒரு கத சொல்லட்டா சார் மலேசிய திரைப்படத்தை காண…
மலேசிய இந்தியன் என்று சொல்லி தலை நிமிர்வோம்…

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button