Malaysia

நாட்டில் 530ஆவது தமிழ்ப்பள்ளி பேராக், சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத்தில் உதயமாகியுள்ளது மார்ச் 10ஆம் தேதி பள்ளி தொடங்கப்படும் மாணவர்கள் பதிவுக்கு தலைமையாசிரியர் திருமதி பொன்னுமணி அழைப்பு

சுங்கை சிப்புட், பிப்.26-

நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் நாட்டில் 530ஆவது தமிழ்ப்பள்ளி பேராக், சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத்தில் உதயமாகியுள்ளது. இப்பள்ளியின் கட்டுமானம் 2022இல் தொடங்கி 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012இல் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் அப்போதைய ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், அப்போதைய ம.இ.கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ தேவமணி ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த ஹீவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அப்போதைய கல்வி துணையமைச்சர் பி.கமலநாதன், தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு பிரிவின் தலைவர் டத்தோ என்.எஸ் ராஜேந்திரன் ஆகியோரும் பள்ளி கட்டுமானம் விரைந்து நடைபெற உதவியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளியின் கட்டுமானப்பணி 18 மாதங்களில் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், கட்டுமானப்பணி நிறைவு பெறதாத நிலையில் குத்தகையாளரின் குத்தகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு பள்ளி கட்டுமான குத்தகை டெண்டர் விடப்பட்டது. அந்த குத்தகை பணி 18 மாதங்களில் பூர்த்தியடைந்துள்ளது. இதற்கு பலரும் பல வகைகளில் உதவியுள்ளனர்.

இந்த சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் கட்டுபானப்பணி 18 மாதங்களில் நிறைவு பெற்று தற்போது செயல்பட தயாராகியுள்ளது. இதற்கு முன்னர் பள்ளியின் குத்தகை ரத்து செய்யப்பட்ட பிறகு அதனை மீண்டும் தொடங்க ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முக்கியப் பங்காற்றியுள்ளார். பள்ளி கட்டுமானம் நடைபெறும் பகுதிக்கு நேரடி வருகை மேற்கொண்டு அது விரைந்து நடைபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதேநேரத்தில் ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த பள்ளி கட்டுமானம் விரைந்து நடைபெற உதவியுள்ளார். அவரும் கட்டுமானப்பணியை நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.
மேலும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் பள்ளி கட்டுமானம் விரைந்து நடைபெற நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி திரு.சண்முகம் மூக்கன் அவர்களும் பள்ளி விரைவில் செயல்பட உதவியுள்ளார்.

இந்த தமிழ்ப்பள்ளி சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத்திற்கு அருகில் குடியிருக்கும் பிள்ளைகளுக்கு கல்வி கற்க வசதியாக இருக்கும் என்பது திண்ணம். இந்த தமிழ்ப்பள்ளி கட்டுமானம் விரைந்து நடைபெற LPS தலைவர் தியாகராஜன் சொக்கலிங்கம் மற்றும் அவரது குழுவில் இடம்பெற்றுள்ள திரு.மூர்த்தி, திரு.ராஜகுமாரன், திரு.சின்னசாமி, திரு.கணேசன் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இந்த வட்டாரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி தேவை என்பதை வலியுறுத்தி LPS தலைவர் திரு.தியாகராஜன் கடந்த 2010இல் ஆய்வு மேற்கொண்டு பள்ளி கட்டப்படுவதற்கு உதவியுள்ளார். இந்த வேளையில் அவருக்கும் மற்ற அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மார்ச் 10ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதால் மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பொன்னுமணி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் 530ஆவது தமிழ்ப்பள்ளியாக பெயர் பெற்றுள்ள சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி பேராக் மாநிலத்தில் 135ஆவது தமிழ்ப்பள்ளியாகும். நாட்டில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில் 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளி கட்டுமானத்தை குத்தகையாளர் விவேகானந்தன் பத்துமலை 18 மாதங்களில் கட்டி முடித்து பள்ளி மார்ச் 10இல் செயல்பட உதவியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button