Malaysia

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையின் பேரில் எம்ஐஇடி கல்வி மேம்பாட்டு வாரியம், கூட்டரசு பிரதேச மஇகாவின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகபையை வழங்கியது கூட்டரசு பிரதேச ம.இ.கா தலைவர் டத்தோ ராஜா சைமன் தகவல்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மார்ச் 7-

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையின் பேரில் எம்ஐஇடி கல்வி மேம்பாட்டு வாரியம், கூட்டரசு பிரதேச மஇகா பள்ளி மாணவர்களுக்கு புத்தகபையை அன்பளிப்பாக வழங்கியதாக கூட்டரசு பிரதேச ம.இ.கா தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.

கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

எம்ஐஇடி எனப்படும் மாஜூ கல்வி மேம்பாட்டு வாரியம் துன் சாமிவேலுவால் தொடங்கப்பட்டது.
இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு எந்த தடையையும் எதிர்நோக்கக் கூடாது என்பது தான் எம்ஐஇடியின் நோக்கமாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த உதவிப் பொருட்கள் வரங்கப்பட்டதாக டத்தோ ராஜா சொன்னார்.

இந்திய மாணவர்களுக்கு மஇகாவும் எம்ஐஇடியும் தொடர்ந்து அரணாக இருக்கும். அதே வேளையில் எம்ஐஇடியின் கீழ் செயல்படும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் கீழ் தற்போது ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது எம்ஐஇடியின் வாயிலாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில்தான் இம்மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் இந்திய மாணவர்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகிறார். இத்திட்டங்கள் எம்ஐஇடியின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
எது எப்படியிருந்தாலும் நாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு அரணாக மஇகாவும் எம்ஐஇடியும் விளங்கும் என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.

தேசம் செய்திகள் சரஸ்வதி பெருமாள் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button