Malaysia

சிம்மோர் கந்தான் கல்லுமலை காளியம்மன் ஆலயத்தின் இரண்டு மாத வரவு செலவு கணக்கு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இடைக்கால ஆலயத் தலைவர் தியாகராஜன் கெங்கன் தகவல்

ஈப்போ,மார்ச் 19-
சிம்மோர் கந்தான் கல்லுமலை காளியம்மன் ஆலயத்தின் இரண்டு மாத வரவு செலவு கணக்கு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இடைக்கால ஆலயத் தலைவர் தியாகராஜன் கெங்கன் கூறினார்.

பேராக் திவால் இலாகா மேற்ப்பார்வையில்
செயல்ப்படும் நடப்பு ஆலய நிர்வாகம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்க்கான ஆலயத்தின் வரவு செலவு கணக்கினை
பேராக் திவால் இலாகா ஒப்படைத்த பின் அதன் அனுமதியுடன் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெளிபடையான உண்மையான வரவு செலவு கணக்காக இனி இருக்கும் என உறுதி கொடுத்த அவர் இனி ஒவ்வொரு மாதமும் ஆலய வரவு செலவு கணக்குகள் பொது
மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று சொன்னார்.

ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் ரிம 21,430 வசூலானது. ரிம 8,430 செலவுகள் செய்ய கையிருப்பில் ரிம 13,000 வெள்ளி இருப்பதாக அதன் புள்ளி விபரபங்களை
காட்டினார்.

அதோடு, பிப்ரவரி மாதம் மட்டும் ரிம
50,977 வெள்ளி வசூலானது என்ற
அவர் ரிம 32,565.05 வெள்ளி செலவு செய்ய கையிருப்பில் ரிம18,411.95 வெள்ளி
இருப்பதாக தஸ்தாவேஜைகளை காட்டினார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button