
சுங்கைப்பட்டாணியில் தமிழனின் வரலாற்றை பறைசாற்றும் ஒரு மாபெரும் நிகழ்வு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையேற்பார் டத்தோஸ்ரீ தனேந்திரன் அறிவிப்பு
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 19-
உலக ரீதியில் தமிழனின் வரலாற்றை பறைசாற்றும் ஒரு மாபெரும் நிகழ்வு ராஜ ராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் ஆண்ட கடாரத்தில் நடைபெறவிருப்பதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.
கெடா, சுங்கைப்பட்டாணியில் நடைபெறவிருக்கும் தமிழர்களின் வரலாற்றை திரும்பி பார்க்கும் இந்த நிகழ்வுக்கு மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையேற்கவிருப்பதாக கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையம், மெனாரா டத்தோ ஓனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
இந்த நாட்டிற்கு தமிழர்கள் சஞ்சிக் கூலியாக வந்தனர் என்று தான் கூறுகின்றர். ஆனால் உண்மையில் நாம் வீரர்களாக இந்த நாட்டிற்கு வந்தோம். வணிகம் செய்ய வந்த என்ற வரலாறுகள் எல்லாம் மறைக்கப்ட்டு வருகிறது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
இதில் உள்ள உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் அடிப்படையில்தான் சுங்கைப்பாட்டாணியில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் கண்ட சிவலிங்கேஷ்வரர் ஆலயத்தில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறவுள்ளதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் சொன்னார்.
இது என்ன நிகழ்வு என்று நாங்கள் இப்போது சொல்ல மாட்டோம். மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை அறிவித்து திறந்து வைக்கப்பார்.
இந்த நிகழ்வு தமிழர்களின் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் என்று டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் குறிப்பிட்டார்.
ஆகவே மக்கள் திரளாக வந்து இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.



