
பிரதமர் துறைக்கு திரும்பியது மித்ரா திறம்பட செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் சதாசிவம் காளிமுத்து பிரதமர் அன்வாருக்கு நன்றி
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், ஏப். 4-
தேசிய ஒற்றுமை அமைச்சில் இருந்து பல்வேறு இழுபறி நிலைகளை சந்தித்த இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு திரும்பியுள்ளது பாராட்டத்தக்கது என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் சதாசிவம் காளிமுத்து கூறியுள்ளார்.
தேசிய ஒற்றுமை அமைச்சில் இருந்த மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு திரும்புவதாக பஹாமி பட்சில் அறிவித்திருந்தார். அமைச்சரவை கூட்டத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சரும் பிரதமர் அன்வாரும் இணைந்து எடுத்த முடிவு இதுவாகும் என்று பஹாமி பட்சில் ஊடகவியளார் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்த மாற்றமானது துணையமைச்சர் சரஸ்வதிக்கு பிரதமர் அன்வார் கொடுத்த சாட்டையடியாகும். மித்ராவை வைத்து ஆட்டம் ஆட நினைத்த சரஸ்வதிக்கு அன்வாரின் முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சதாசிவம் பலரும் கருத்து தெரிவித்தார்.
மித்ரா சில மாதங்களாக தேசிய ஒற்றுமை அமைச்சில் இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில் மித்ரா பிரதமர் துறைக்கு வந்தால் மட்டுமே செயல்பட முடியும் என்பதை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்டது பிரதமர் அன்வாரின் சிறந்த முடிவு என்று சதாசிவம் சொன்னார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று அரசு சாரா இயக்கங்கள், துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் மித்ரா பிரதமர் துறைக்கு மாறும் அறிவிப்பு வந்துள்ளது.
ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முயற்சியில் சிரமப்பட்டு பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்ட மித்ரா மீண்டும் தேசிய ஒற்றுமை அமைச்சுக்கு மாற்றப்பட்டது. மித்ராவை பிரதமர் துறைக்கு மாற்றும் கருத்தை தான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கூறியிருந்தார்.
மித்ரா மீண்டும் பிரதமர் தறைக்கு கொண்டு வருவதற்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் ஒரு காரணம். இப்படி பாடுபட்ட பலருக்கும் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் சதாசிவம் காளிமுத்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதனால் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பல குளறுபடிகளை செய்து வேலை செய்ய விடாமல் தடுத்ததாக மித்ரா பணிக்குழு தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்ர.
இந்நிலையில் மித்ரா பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



