Malaysia

இலக்கை நோக்கி நகர்கிறது மஇகா இளைஞர், மகளிர் பிரிவில் மாற்றம் அர்விந்த் கிருஷ்ணன் சரஸ்வதி போட்டியிடுவது உறுதி

தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஏப்.11-

தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ம.இ.கா இளைஞர், மகளிர் பிரிவு தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

தேசிய தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டி இல்லாமல் ஏகமனதாக வெற்றி பெற்ற தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ம.இ.காவில் அதிகமான இளைஞர்களை கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

அந்த வகையில் மஇகா இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கு அர்விந்த் கிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கு போட்டிகள் கட்சி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி இளைஞர் பிரிவு நடப்பு செயலாளரும் மத்திய செயலவை உறுப்பினருமான அர்விந்த் கிருஷ்ணன் மார்ச் 6 சனிக்கிழமை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்திள்ளார்.

இதனிடையே
மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கெமேலா சட்டமன்ற உறுப்பினர் என். சரஸ்வதி அறிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுப்பட்டு வருவதாகவும் குறிப்பாக மஇகாவில் பல கட்ட பொறுப்புகளை வகித்துள்ளதாக கூறிய சரஸ்வதி அதனை உறுபடுத்தியுள்ளார்.

பலக் கட்ட போராட்டங்களுக்கு பின் கெமேலா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் சரஸ்வதி
இந்த அரசியல் அனுபவத்தை கொண்டு இந்தப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த இரு தகவல்களை வைத்து பார்க்கும் போது அடுத்த கட்ட தேர்தலை நோக்கி ம.இ.கா நகர்ந்து வருவது தெரிகிறது. இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்கு இந்த மாற்றங்கள் உதவும் என்று நம்பலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button