Malaysia

“என்னை செதுக்கிய கட்சி மஇகா” “வலுப்படுத்த நினைக்கிறேன்” ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு அர்விந்த் கிருஷ்ணன் போட்டி: துணைத் தலைவருக்கு கேசவன் போட்டி

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஏப்.11-
“ம.இ.கா என்னை செதுக்கிய கட்சி. அந்த கட்சியை வலுப்படுத்த நினைக்கிறேன் என்று மஇகா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடப்பு செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு கேசவன் கந்தசாமி போட்டியிடுவதாகவும் இருவரும் AK கூட்டமைப்பில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

மஇகா கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அண்மையில் ம.இ.கா தேசிய தலைவர் பதவிக்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு பெற்றார். இதில் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் அறிவிப்புகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மஇகாவின் இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவதாக அர்விந்த் கிருஷ்ணன் அறிவித்தார். 2024 முதல் 2027 தவனைக்கான தேர்தலில் தான் களத்தில் இறங்குவதாக ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அர்விந்த் தெரிவித்தார்.

அதே வேளையில் மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு கேசவன் கந்தசாமி போட்டியிடுகிறார்.
நாங்கள் இருவரும் AK அணியில் இருந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளோம் என்றனர் இருவரும்.

கட்சி தேர்தலில் போட்டி எல்லாம் சகஜம். ஆனால் இந்த தேர்தலால் இளைஞர் பிரிவில் பிளவு இருக்கக் கூடாது என்று அர்விந்த் கிருஷ்ணன் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button