
KLIA 2 விமான முனையத்தில் போக்குவரத்து மையம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது முனையத்தில் வருகை மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லொக் தகவல்
சிப்பாங், ஏப்.10-
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய முனையம் 2 இன் போக்குவரத்து மையம், பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லொக் கூறினார்
Asia Success Resources Sdn Bhd நிறுவனத்தின் தலைமையில், போக்குவரத்து மையம் மின்னியல் முறையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் மொபைல் ஆப்ஸ் மற்றும் கியோஸ்சிக் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை பணமில்லாமல் வாங்குதல், ஆட்டோமேஷனுக்கான ஸ்மார்ட் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்ப மேம்படுத்தல்களைக் கொண்டிருப்பதாக அந்தோணி லொக் தெரிவித்தார்.
இந்த விமான முனையத்தில் மறுசீரமைக்கப்பட்ட மின்னியல் தொழில்நுட்டத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிமிக விழாவில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..
“ஜனவரி 2024 முதல், Asia Success Resources Sdn Bhd பொதுப் போக்குவரத்து மைய முனையம் 2ஐ நிர்வகித்து வருகிறது.
“இந்த புதிய நிறுவனம் நியமிக்கப்பட்டதில் இருந்து, பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான் தெரிந்து கொண்டேன். “மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் டிக்கெட் விற்பனை வசதிகள் மற்றும் பேருந்து மற்றும் பயணிகள் அணுகல் கட்டுப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது” என்று அந்தோணி லொக் சொன்னார்.
gateway@klia2 இல் ஷாப்பிங் செய்வதை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் ஓய்வெடுக்கவும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும், தாராளமாக வெகுமதி பெறவும் வாய்ப்பளிக்கும்” என்று WCT மால்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செலினா சுவா கூறினார்.
இந்த விழாவில் போக்குவரத்து அமைச்சருடன் சிலாங்கூர் சுல்தானின் சகோதரர் தெங்கு சுலைமான் ஷா, தொழிலதிபர் டத்தோ ஏ.கே.தேவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



