Malaysia

ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையாவுக்கு சிறந்த அரசியல் சேவைக்கான “அப்துல் கலாம் விருது” ABJ அறவாரியம் வழங்கி கௌரவித்தது

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

கோலாலம்பூர், மே 13- அரசியல் ஈடுபாட்டின் வழி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியமைக்காக ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையாவுக்கு சிறந்த அரசியல் சேவைக்காக இந்தியாவை தளமாக கொண்டு செயல்படும் ABJ அறவாரியம் அப்துல் கலாம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த சிறந்த அரசியல் சேவைக்கான அப்துல் கலாம் விருது அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் டத்தோ முருகையாவுக்கு வழங்கப்பட்டது. ம.இ.காவில் தேசிய உதவி தலைவராக இருந்து வரும் டத்தோ முருகையாவுக்கு இதுவொரு சிறந்த அங்கீகாரமாகும்.

அரசியல் பயணத்தில்்தன்னை 35 ஆண்டுகள் இணைத்துக் கொண்டுள்ள டத்தோ முருகையா, தொடக்கத்தில் மைபிபிபி கட்சியில் இணைந்தார். இதன் வழி ஈப்போ மாநகராண்மைக் கழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் ஈப்போ மாநகரின் மக்கள் பிரச்சினைகள், அசுத்தப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். பிபிபி கட்சியில் இளைஞர் பிரிவு தலைவராக பதவியேற்ற டத்தோ முருகையா மக்கள் புகார் துறை துணையமைச்சர் ஆனார். துணையமைச்சராக பதவியேற்ற நிலையில் மக்கள் புகார்களை உடனுக்குடன் கவனிக்கும் ஒரு துணையமைச்சராக டத்தோ முருகையா இருந்து மக்கள், அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் ஈடுபாடு கொண்ட டத்தோ முருகையா மக்களுக்கு பல்வேறு சேவைகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த 35 ஆண்டுகள் சேவையாற்றி வரும் டத்தோ முருகையாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மைபிபிபி கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மைபிபிபி கட்சியில் இருந்து விலகி கடந்த 2009இல்
ம.இ.காவில் இணைந்தார்.

ம.இ.கா கிளையை தொடங்கி , தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு தேசிய ம.இ.காவில் உதவி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு கடந்த இரண்டு தவணைகளாக உதவி தலைவராக இருந்து வரும் டத்தோ முருகையாவுக்கு சரியான தருணத்தில் அப்துல் கலாம் விருது அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மக்களுக்கு டத்தோ முருகையா ஆற்றிய சேவைக்காக இந்த அப்துல் கலாம் விருது கோலாலம்பூரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்றுக் கொண்ட டத்தோ முருகையா ABJ அறவாரியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button