Malaysia

மக்கள் பிரச்சினைகளுக்குவமுக்கியத்துவம் வழங்குங்கள் சேவை வழங்காமல் சுயநல போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிள்ளான் மாநகராண்மைக்கழக கவுன்சிலர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் வட்டார மக்கள் கோரிக்கை

தேசம் அதிரடி அலசல் துரைசிங்கம்

கிள்ளான், மே 13-
கிள்ளான் வட்டாரத்தில் அடிதட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதும் அதனை எளிதாக்குவதும் நகராண்மைக்கழக உறுப்பினர்களின் கடமையாகும். அந்த வகையி்ல் கிள்ளான் மக்கள் குறிப்பாக செந்தோசா மக்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது நகராண்மைக்கழக உறுப்பினர்களின் கடமையாகும் என்று தேசம் மேற்கொண்ட அதிரடி அலசலில் தெரியவந்துள்ளது.

மக்களுக்கான சேவையை மாநகராண்மைக்கழக உறுப்பினர்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். இதில் குறிப்பாக கிள்ளான் வட்டாரத்தில் மக்கள் எதிர்நோக்கும் குப்பைகள் பிரச்சினை, வெள்ளப் பிரச்சினைக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி அவர்களால் அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கு வழிவிட்டு நகராண்மைக்கழக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிள்ளான் செந்தோசாவில் வெள்ளப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதில் அப்பதவிக்கு
நியமிக்கப்பட்ட அனைத்து நகராண்மைக்கழக உறுப்பினர்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை கவனித்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தார் வெள்ளப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று மக்கள் கருத்துரைத்தனர்.

செந்தோசாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். கால்வாய்களில் தண்ணீர் போக முடியாமல் அடைத்துக் கொண்டுள்ளது. இதனை யார் சரிகட்டுவது? அது யார் பொறுப்பு?

மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் தங்கள் பணியை சரிவர செய்ததில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு. இதற்கு கவுன்சிலர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? நகராண்மைக்கழக உறுப்பினர்கள் தங்களைப் பற்றி மட்டும் நினைக்கிறார்கள். மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
‘‘சிந்திக்கவும், திட்டமிடவும் உதவுவதுதான் மாவட்ட கவுன்சிலர்கள் பொறுப்பு. அதனை அவர்கள் முறையாக செய்கிறார்களா?

“நகரசபை உறுப்பினராக இருப்பது சுயலாபத்திற்காக அல்ல, அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னேற்றத்தை அனுபவிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிடுவதே அவர்களின் வேலை” என்று மக்கள் பலர் தெரிவித்தனர்.

மக்களுக்கு சேவை வழங்காமல் சுயநல போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கவுன்சிலர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று மக்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button