Malaysia

இந்திய குடும்பமாது உமாவதிக்கு உலுசிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் புவனேஸ்வரன் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் Dr சத்திய பிரகாஷ் மூலம் உதவி வழங்கினார்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

புக்கிட் பெருந்தோங்,மே 14-
ரவாங்கில் வங்கிக்கு முன்புறம் டிஷ்சு பேப்பர், பேனா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து குடும்ப வருமானத்தை தேடி வந்த குடும்ப மாதுவிற்கு உலுசிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் புவனேஸ்வரன் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் Dr சத்தியபிரகாஷ் மூலம் வருமானத்தை ஈட்டக்கூடிய தொழில் செய்ய உதவி வழங்கியுள்ளார்.

புக்கிட் பெருந்தோங், தாமான் பூங்கா ராயா அடுக்குமாடி வீட்டில் குடியிருந்து வரும் குடும்ப மாது நோய்வாய்பட்டுள்ள தன் கணவர் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வாழ்க்கையோடு போராட்டம் நடத்தி வருவதை உலு சிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் ஒருவர் மூலம் அறிந்த புவனேஸ்வரன் அம்மாதுவுக்கு தேவைப்படும் உதவிகளை Dr சத்திய பிரகாஷ் மூலம் வழங்கியுள்ளார்.

இந்த மாதுவின் மூன்று பிள்ளைகள் படிக்கின்றனர். அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதற்கு மூன்று பேருக்கான பஸ் கட்டணம் மாதம் 300 வெள்ளி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த மாது தமது வருமானத்தை வீட்டிற்கு அருகில் தேடிக் கொள்வதற்கு அடிப்படை வசதிகளை கோரியிருந்தாக புவனேஸ்வரன் தெரிவித்தார்.

இம்மாது காலையில் குடை போட்டு காலை உணவு விற்பனை செய்ய எண்ணம் கொண்டிருந்தார். அதேநேரந்தில் மாலையில் பூ வியாபாரம் செய்யவும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் அம்மாதுவுக்கு தேவையான குடை, மேஜை, நாற்காலி, பிளேண்டர் உள்ளிட்ட பொருட்களை Dr சத்தியபிரகாஷ் வழங்கியதாக புவனேஸ்வரன் சொன்னார்.

அந்த மாதுவை நேரில் சந்தித்த Dr சத்தியபிரகாஷ் அந்த பொருட்களை வழங்கினார். சுயமாக உழைத்து சம்பாதிக்கு எண்ணம் கொண்டிருந்த அம்மாதுவை பாராட்டிய சத்திய டாக்டர் பிரகாஷ் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக Dr சத்திய பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button