
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது! தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து
கோலாலம்பூர் மே 16-
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர். இந்நாளில் மட்டுமன்றி எல்லா நாளும் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்று தான்ஸ்ரீ ச.
விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர்கள் செய்துவரும் சேவை மகத்தானது.
மேலும் ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும்.
மாணவர்கள் தங்கு தடையின்றி தரமான கல்வியை பெறுவதற்கு ஆசிரியர்கள் தங்களது கடமையை முறையாக செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பணியை திறம்படச் செய்ய வேண்டும்.
இந்நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைதான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்து கொண்டார்.



