Malaysia

இந்திய தொகுதி தலைவர்களை வளைத்து போட ஒற்றன் தூது… பணத்தால் இந்திய தலைவர்களை வளைத்து போட நினைக்கும் அந்த ஆசாமி யார்? வாக்கு வாங்க பணமா? எம் ஏ.சி.சி விசாரிக்குமா? எங்கிருந்து வருகிறது பணம்?

தேசம் அதிரடி அலசல் துரைசிங்கம்

கோலாலம்பூர், மே 28-
ஒரு கட்சியில் உள்ள இந்திய தொகுதி தலைவர்களிடம் தொகுதியை வழிநடத்த பணமே இல்லையாம். அவர்களுக்கு உதவ ஒற்றன் ஒருவர் தூது வந்துள்ளார். அந்த ஒன்றன் பேசிய குரல் பதிவு சில தினங்களாக சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்த பதிவில் ஒரு பெரிய தொகை தொகுதி தலைவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் நிலையில் , இது தொடர்பாக 2 நாள் ஒன்றுகூடல் சந்திப்பை இந்திய தொகுதி தலைவர்களுடன் நடத்தவிருப்பதாக சொல்லப்பட்டது.

இதில் அந்த குரல் பதிவில் அடுத்த ஆண்டு கட்சி தேர்தலுக்கும் காசு தேவைப்படும் இல்லை என்றால் ஓட்டு போட உறுப்பினர்கள் யாரும் வரமாட்டார்கள். அதற்கும் பணம் தேவை என அந்த பதிவில் கூறப்படுகிறது. இது அந்த கட்சி தலைமைக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லையா ? என்பது தெரியவில்லை. ஆனால், இதன் பின்னால் ஓர் ஆசாமி ஒழிந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

பணம் கொடுத்து வாக்கு வாங்குவது சட்டபடி குற்றம். அதனை வெளிப்படையாக பேசியும் வருகிறார்கள். இதனை எம்.ஏ.சி.சி விசாரிக்குமா ?

இவர்களுக்கு எங்கே இருந்து வருகிறது? இவ்வளவு பெரிய தொகை, கட்சி தலைமை கொடுத்தால் எல்லா தொகுதிக்கும் கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ஏன் இவர்கள் இந்திய தொகுதி தலைவர்களுக்கு மட்டும் குறி வைத்துள்ளனர்?

பணம் கொடுத்து இந்த தொகுதி தலைவர்களை வளைத்து போட துடிக்கும் அந்த ஆசாமி யார்? இந்த ஒன்றன் எங்கிருந்து அந்த பணத்தை கொண்டுவர போகிறார்?

இது கருப்பு பணமா ? எங்கிருந்து வருகிறது ? இது கட்சி தலைமைக்கு தெரியுமா? என்பதை தலைமையிடம் விட்டுவிடுவோம். ஆனால், பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பது ஜனநாயக படுகொலை. அப்படி ஏதாவது நடந்தால் அதை சட்டத்தின் பார்வைக்கு ஊடகங்கள்
கொண்டு வர வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button