
படிக்கத் தெரியாத மாணவர்கள் உடற்பேறு குறைந்தவர்களா? மாணவர் குணசேகரன் வெயிலில் நிற்க வைத்த சம்பவம் திசைத் திருப்பப்படுகிறது தயாளன் ஸ்ரீ பாலன் குற்றச்சாட்டு
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஜூன் 5-
படிக்கத் தெரியாத மாணவர்கள் உடற்பேறு குறைந்தவர்கள் என மருத்துவர்களால் முத்திரை குத்தப்படுகிறது என்று .
மியாபோர்ஸ் அமைப்பின் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மாணவனின் பிரச்சினை தீர்வு காணப்படாமல் இந்த விவாகரத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது தெளிவாக புரிகிறது. பல்வேறு சாக்குபோக்கு சொல்லி இம்மாணவன் வெயிலில் நிறுத்தப்படுவதற்கு முன்னரே உடற்பேறு குறைந்தவர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தயாளன் ஸ்ரீ பாலம் கூறினார்.
இந்த மாணவனுக்கு ஏற்கனவே இப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்தான் கல்வி அமைச்சு மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் மகஜர் வழங்கப்பட்டுள்ளதாக தயாளன் ஸ்ரீ பாலன் தெரிவித்தார்.

ஆசிரியரால் வெயிலில் நிற்க வைத்த மாணவன் குணசேகரன் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இவ்விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை வழக்கறிஞர் தினேஷ் முத்தல் பார்த்துக் கொள்வார் என்று தயாளன் சொன்னார்.
மாணவர்களிடையே நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் கணக்கு ஆசிரியர் வெயிலில் நிறுத்தி உள்ளார். ஆனால் குணசேகரன் என்ற மாணவனை மட்டும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வெயிலில் நிறுத்தி உள்ளார்.
இதனால் மாணவர் வெப்ப ஸ்ட்ரோக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அவர் மன ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை முடிவடைந்து விட்டதாக அம்பாங் மாவட்ட போலீஸ் படை தலைவர் கூறியிருந்தார். ஆனால், விசாரணை முடிவடைந்த பின்னரும் மாணவனின் பெற்றோரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி என்றால் விசாரணை முடிவடைந்து விட்டது என்பதற்கு என்ன அர்த்தம்? அதேவேளையில் இந்த மாணவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் மாற்றப்பட்டுள்ளார். ஆகவே, இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாக தயாளன் ஸ்ரீ பாலன் குறிப்பிட்டுள்ளார்.



