
நட்புக்காக சங்கமம் கேரித் தீவு குழுவினர் இடைவிடாமல் ஏற்பாடு செய்து வரும் ஒன்றுகூடல் உறவை வலுப்படுத்தும் என்கிறார் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன்
நட்புக்காக சங்கமம் கேரித் தீவு குழுவினர் இடைவிடாமல் ஏற்பாடு செய்து வரும் ஒன்றுகூடல்
உறவை வலுப்படுத்தும் என்கிறார் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன
கோலாலம்பூர்,ஜூன் 14-
நட்புக்காக கடந்த 1985 ஆம் ஆண்டுகளில்
இருந்து ஒன்று கூடல் நிகழ்ச்சியை நட்புக்காக சங்கமம் கேரித் தீவு குழுவினர் மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர்.
1979 ஆம் ஆண்டு முதல் 1981 வரை மூன்று ஆண்டுகள் SRP தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த ஒன்று கூட நிகழ்ச்சியை நடத்தி வருவதுடன் அங்குள்ள தமிழ் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவதும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உதவிகளையும்
பல சுற்று பயணங்களையும் இந்தக்
குழு ஏற்பாடு செய்து வருவதாக இந்த
இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இவற்றுடன் இக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மருத்துவச் சிகிச்சை, மரண சகாயம் நிதி, வழங்கி வருவதோடு லியோனி பட்டிமன்றம், தலைமையாசிரியர் போல் நாதன், உருவப்படம் ஓவியமாக வரைந்து வழங்கியது.
நாட்டின் புகழ் பெற்ற ஒவியர் டாக்டர் சந்திரன் அதனை வரைந்தார் என்று கூறியவர்,
லங்காவி, பங்கோர் தீவு, போர்ட்டிக்சன் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் போனதையும்
டாக்டர் ராமச்சந்திரன் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



