
செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் திருவிழா 50 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 23–
நாட்டில் புகழ் பெற்ற ஆலயமாக திகழும் செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவில் 50 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்.
செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 33ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா கடந்த ஒரு வாரமாக சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கிய வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரம், காவடி ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 33ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழாவை
முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆலயம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு இரவும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை உச்சக்கட்டமாக காலை முதல் பக்தர்கள் பால்குடம், கரகம், தீச்சட்டி, காவடிகள் ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க பலர் தண்ணீர் பந்தல் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



