
இந்திய கூட்டுறவுக் கழகங்கள் அரசாங்க வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கேகேபியின் 44ஆவது ஆண்டுக் கூட்டத்தில் டத்தோ ரமணன் வலியுறுத்து
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
கோலாலம்பூர்,ஜூன் 23-
நாட்டில் பி40 பிரிவு மக்களுக்காக செயல்பட்டு வரும் இந்திய கூட்டுறவுக் கழகங்கள் அரசாங்க வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.
பி40 மக்களுக்காக இக்கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று கேகேபியின் 44ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்த டத்தோ ரமணன் அவ்வாறு தெரிவித்தார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் கீழ் 10 இலாகாக்கள் உள்ளன. இதன் கீழ் பல திட்டங்கள் அமலில் உள்ளன. இதன் வாயிலாக கிடைக்கும் வாய்ப்புகளை கூட்டுறவு கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் நாணய கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்கள் நலத் திட்டங்களில்
தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அதன் தலைவர் தங்கராஜ் கூறினார்.
கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் நாணய கூட்டுறவு சங்க நிறுவனம் இந்நாட்டில் 44 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக பி40 மக்களுக்காக இந்த கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் மொத்தம் 45 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 25 கோடி வெள்ளியை கடனாக கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் உறுப்பினர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பல திட்டங்களை வகுத்து வருகிறது என்று தங்கராஜ் மேலும் கூறினார்.



