Malaysia

மைபிபிபி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஆகஸ்ட் 18 ஆம் தேதி WTCயில் நடைபெறும் பிரதமர் – துணை பிரதமருக்கு நேரடி அழைப்பு டத்தோ லோக பாலா மோகன் தகவல்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர் ஜூன் 23-
மைபிபிபி கட்சியின் 71 ஆம் தேசிய பேராளர் மாநாடு WTC உலக வாணிப மையத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறவிருப்பதாக மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் 1,200 பேராளர்கள் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதில்
கட்சியின் சட்ட விதிகளின் மிகப்பெரிய மாற்றம் செய்யப்படுகிறது. இதில் முக்கியமாக தலைவரின் அதிகாரம் குறைக்கப்பட்டு பேராளர்கள், உறுப்பினர்களின் அதிகாரம் உயர்த்தப்படுவதாக விஸ்மா மைபிபிபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ லோகபாலா அவ்வாறு கூறினார்.

இந்த சட்டதிருத்தங்களில் தலைவர்கள் இத்தனை தவணைகள் மட்டுமே பொறுப்பில் இருக்க சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பில் பேராளர்கள் முடிவு செய்வார்கள் என்று டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோருக்கும் முறையாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மைபிபிபி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதையும் இந்த மாநாட்டில் பேராளர்கள்
முடிவு செய்வார்கள் என்று டத்தோ லோகபாலா மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button