Malaysia

பேராக் மாநில பிரதிநிகளான மூவர் ம இ கா மத்திய செயற்குழுவிற்கு போட்டியிடுகின்றனர்

தேசம் செய்திகள் ஆர்.பாலசந்தர்

ஈப்போ, ஜுன்.23-
ம இ காவின் பொது தேர்தலில் இம்முறை மூவர் மட்டுமே பேராக் மாநில பிரதிநிதிகளாக போட்டியுடவுள்ளனர்.
இம்முறை 45 போட்டியாளர்கள் களம் காணும் பொருட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பேராக் மாநிலம் பொருத்தமட்டில் பெரிய மாநிலமாகவும், அதிக ம இ கா கிளைகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. இம்முறை பேராக் மாநில பிரதிநிதிகளாக வின்சன டேவிட் எண் 8; மகேந்திரன் இராமச்ந்திரன் எண் 26 மற்றும் டத்தோ ஆர்.சுப்பிரமணியம் எண். 42 ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர் போட்டியில் களம் காணுகின்றனர்.

இம்முறை 45 ம இ கா பேராளர்கள் மத்திய செயலவைக்கு போட்டியிடுவது ஆரோக்கியமான நடவடிக்கையாகும். இவர்களில் முதல் 21 வெற்றியாளர்கள் மட்டுமே மத்திய செயலவைக்கு தேர்வாகவுள்ளனர்.

இவர்களில் 8 எண் கொண்ட வின்சன் டேவிட் நடப்பு மத்திய செயலவை உறுப்பினராகவும், சுங்கை சிப்புட் ஜாலோங் கிளை தலைவருமாவார். 26 எண் கொண்ட மகேந்திரன் இராமச்சந்திரன் கோப்பெங் ம இ கா தொகுதி தலைவராவார். அதோடு, 42 ம் எண் கொண்ட டத்தோ ஆர். சுப்பிரமணியம் நடப்பு மத்திய செயலவை உறுப்பினர் என்பதோடு,பாகான் டத்தோ ம இ கா தொகுதித்தலைவரார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button