
பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பாளர்கள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன பராமரிப்பு நிர்வாக தலைவர் அனுராதா ராமசாமி தகவல்
பத்துகேவ்ஸ், பிப்.4-
பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர்கள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளதாக பராமரிப்பு நிர்வாகத்தின் தலைவர் அனுராதா ராமசாமி கூறினார்.
இந்த குடியிருப்பு நிர்வாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழிநடத்தி வரும் நடப்பு பராமரிப்பு நிர்வாகம் குடியிருப்பாளர்களின் வசதிக்காகவே பல மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. இதில் குறிப்பாக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தீயணைப்பு பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் Sauna, Laundry, Cafe, Gym equipments உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகளின் உறவினர்கள் வருகை பதிவு முறைபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாடியிலும் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தேசம் டிவிக்கு வழங்கிய பேட்டியில் அனுராதா தெரிவித்தார்.
நீச்சல் குளத்தை தரம் உயர்த்தும் திட்டம் முக்கியமாக மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்வது, சிசிடிவி பொருத்துதல், நீருற்று மூலம் அழகுபடுத்துதல் போன்ற மேம்பாட்டு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீச்சல் குளத்தில் இருக்கும் தரை கற்களை மாற்றியமைப்பது, பூச்செடிகளால் அதனை அழகுப்படுத்துவது, சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது, அடுக்குமாடி கட்டடத் தொகுதியை தரமான வர்ணம் மூலம் அழகுப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டங்களுக்கு பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று அனுராதா சொன்னார்.
அடுக்குமாடி கட்டடத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை நிர்வாகம் உடனுக்குடன் கவனித்து வருகிறது. எங்களுக்கு குடியிருப்பாளர்களின் நலன் மிகவும் முக்கியம். நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் குடியிருப்பாளர்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பராமரிப்பு நிர்வாகம் தேசம் ஊடகத்திற்கு வழங்கிய விளக்கம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் அ

னைத்திற்கும் பொருளாதாரம் மிகவும் முக்கியம். இதற்காகவே குடியிருப்பாளர்களின் மீதமுள்ள பராமரிப்பு கட்டணங்களை திரும்ப வசூல் செய்ய நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டுள்ளன.
பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தொகுதி தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக தரமான வர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஞாயிறுதோறும் இங்கு ஐந்தாவது மாடியில் பல்வேறு வியாபாரங்களை செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல திட்டங்கள் குடியிருப்பாளர்களின் நலனுக்காகவே முன்னேடுக்கப்பட்டுள்ளதாக அனுராதா குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காலத்திற்கு பிறகு அதாவது 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதற்காக சிம்போனி ஹய்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்வழி அவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் பராமரிப்பு கட்டணத்தை முறையாக செலுத்த ஒரு வாய்ப்பு ஏற்படும். இதுபோன்ற பல திட்டங்கள் குடியிருப்பாளர்களின் நலனுக்காக முன்னேடுக்கப்படவுள்ளன. இதில் குடியிருப்பாளர்களும் தங்கள் யோசனைகளை பராமரிப்பு நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்.
பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பாளர்களின் நலனுக்காக நாங்கள் அனைத்து தரப்பினருடன் குறிப்பாக குடியிருப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். இது நமது குடியிருப்பு. இதனை மிகவும் சிறப்பாக செயல்படுத்த அனைத்து தரப்பினரும் இணைந்து செயலாற்றுவோம் என்று பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் பராமரிப்பு நிர்வாகத்தின் தலைவர்
அனுராதா ராமசாமி
குடியிருப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



