Malaysia

BRIEF-i திட்டம் மூலம் 38 லட்சம் வெள்ளி 43 விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது டத்தோ ரமணன் தகவல்

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர்,ஜூன் 38- தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டமான BRIEF-i திட்டம் மூலம் 38 லட்சம் வெள்ளி 43 விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த BRIeF – I திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரிடம் இருந்து 1,000க்கும் மேற்பட்ட BRIEF-i விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளன.
இதில் மொத்தம் 135 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதன் மொத்த நிதி 57 லட்சம் வெள்ளியாகும் என்று காசோலை வழங்கும் விழாவில் பேசுகையில் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இந்த BRIeF கடனுதவி திட்டத்திற்கான 43 விண்ணப்பங்களுக்கு மொத்தம் 40 லட்சம் வெள்ளி இலக்குடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் தங்கள் வணிக இலக்குகளை அடைய உதவுவதில் அரசு மற்றும் பேங்க் ரக்யாட் ரக்யாட் போன்ற நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று ரமணன் சொன்னார்.

ஆற்றல்மிக்க தொழில் முனைவோர் தங்கள் வர்த்தக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு மேம்பாட்டு பிரிவுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

“BRIEF-i போன்ற நிதியுதவித் திட்டங்களின் மூலம், அதிகமான இந்திய தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை பெற முடியும் என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய முடியும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

பேங்க் ராக்யாட் வங்கி மூலம் இந்திய தொழில்முனைவோருக்கு BRIEF-i திட்டம் மூலம் 50 லட்சம் வெள்ளி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்தும் இந்திய தொழில்முனைவோர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கு இந்த கடனுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button